நீண்ட நாட்களுக்கு பின் பிக் பாஸ் பிரபலங்களை சந்தித்த ஜூலி.! புகைப்படத்தை கலாய்த்த ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் டாக் ஆப் தி டவுனாக இருந்து வருகிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. 3 சீசன்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் மக்களுக்கு மிகவும் பிடித்த பிக்பாஸ் சீசன் என்றால் அது மிகையாகாது. அந்த சீசனில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அடையாளம் கண்டு எடுக்கப்பட்ட ஜூலி.
https://twitter.com/lianajohn28/status/1177468648002215938
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.
இதையும் பாருங்க : சிம்புவாக சென்று டி ஆர் போல முடியும் தாடியுமாக திரும்பிய சிம்பு.! வைரலாகும் புகைப்படங்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சக போட்டியார்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜூலி தனது உடன் போட்டியாளர்களான காஜல் மற்றும் காயத்ரியை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல ஜூலியை கழுவி ஊற்றி வருகின்றனர் .