தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத் துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. மேலும், நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.ஆனால் , நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர். அதைத் தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.
இதையும் பாருங்க : கவின் பற்றி சாக்க்ஷி இப்படி தான் நினைக்கிறார் .! ட்வீட் செய்த முன்னாள் போட்டியாளர்.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!
இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பின்னர் தன்னுடைய தம்பியின் திருமணத்தில் ரொம்ப பிஸியாக இருந்தார். அதற்குப் பின்னால் சிம்பு குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டார்கள்.
இதற்கு முன்னால் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் சிம்புவின் வருகைக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்தார்.மேலும், அவருடைய கால்ஷீட் தாமதமானதால் மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்க போவதாக சுரேஷ் காமாட்சி இணையதளங்களில் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிம்பு மாநாடு படத்திற்குப் போட்டியாக “மகா மாநாடு” என்ற படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் இந்த படத்தை தன்னுடைய தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் தயாரிக்க போகிறார் என்றும் அறிவித்தார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னால் மீண்டும் ஒரு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று உள்ளார். பிறகு வெளிநாடு சென்றுள்ள சிம்பு தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். சமீபத்தில் சென்னை திரும்பியுள்ள சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சிம்புவாக வெளிநாடு சென்ற சிம்பு தற்போது அவரது அப்பா டி ஆர் போல தாடி முடியுடன் புதிய கெட்டப்பில் மாறியுள்ளார்.