புத்தகத்தை வைத்து நடத்திய ஷூட்டிற்கு வந்த ஆபாச கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த ஜூலி

0
1604

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்துவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டிருக்கிறது என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

This image has an empty alt attribute; its file name is 1-17-1024x1019.jpg

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

- Advertisement -

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. ஆனால், அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த லாக் டவுன் சமயத்தில் மட்டும் அம்மணி ஏக்கச்செக்க போட்டோ ஷூட்களை நடத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் சட்டை பட்டனை துறந்து காலரை தூக்கிவிட்டு அதனை புக்காள் மறைத்து படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றைநடத்தி இருந்தார்.

வழக்கம் போல இந்த புகைப்படமும் படும் கேலிக்கு உள்ளாது. இப்படி ஒரு நிலையில் ஜூலி பதிவிட்ட அந்த புகைப்படத்திற்கு கீழே வந்த ஆபாசமான கருத்துகள் குறித்து முகநூலில் ஒரு நபர் பதிவிட்டிருந்தார். அதில், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் அக்கறை இருப்பதாக வெளிப்படுத்தும் நபர்கள் எப்படி ஐயா அந்த வக்கிர சிந்தனைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பான போது எந்த காரணத்தினால் உங்களுக்கு ஜூலி பிடிக்காமல் போனது அதைவிட நூறு மடங்கு மனம் கொண்டவர்கள் நீங்கள் என்பதை கருத்தில் கொண்டு கண்ணாடி முன்பு நின்று பாருங்கள் உங்கள் கோரமுகத்தை நீங்களேவெட்கப்படுவீர்கள்.முகநூலில் வாசியின் இந்த பதிவினை ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை கேலி செய்யும் நபர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார் ஜூலி.

-விளம்பரம்-

Advertisement