ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி எதாவது பதிவிட்டு ரசிங்கர்களிடம் வாங்கி காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ்சால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், ஜூலி தனது புகைப்படத்தை பதிவிட்டு மக்களை பிஸியாக வைக்கப்போவதாக கூறி இருந்தார்.

ஆனால், ரசிகர்கள் சிலர், நீ புகைப்படத்தை பதவிடுவதற்கு பதிலாக நீ நர்ஸ் தானே போய் யாருக்காவது உதவலாமே என்று கேட்க, அதற்கு ஜூலி பதில் அளித்துள்ளார். அதில், செவிலியர் பணி என்பது புனிதமான பணி. அதற்கு நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. மற்ற வேலைகளை போல செவிலியர் வேலையை சாதாரணமாக செய்துவிட முடியாது. அதேபோல ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்வது கடினம். சூட்டிங் காரணத்தால் வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால் நோயாளிகள் காத்துக் கொண்டிருக்க நேரிடும். நோயாளிகளின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்ப வில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

இனி செவிலியர் தொழிலை பார்க்கவே மாட்டேன் என்று கூறும் இதே ஜூலி தான் கடந்த 2017 ஆம் ஆண்டு செவிலியருக்காக குரல் கொடுக்க சென்று பல்ப் வாங்கிவிட்டு திரும்பி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள DMS வளாகத்தில் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

Advertisement

இந்த போராட்டத்தினால் அங்கே பல்வேறு போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தார்கள் அப்போது நடிகை ஜூலி நானும் நர்ஸ் தான் நானும் நர்ஸ் தான் என்று வடிவேலு பாணியில் கூறிக்கொண்டு இந்த போராட்டத்தில் குதிக்க சென்றார் ஆனால் அங்கே இருந்த போலீசார் இவரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்து அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement