ராமநாதபுரத்தில் பாபா பகுர்தீனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆறடி உயரம், நீண்ட முடி, கறுப்பு ஆடை எனத் தமிழ் சினிமாவின் வில்லன் மெட்டீரியலான இவர், பிஸியான விளம்பரம் மற்றும் குறும்பட இயக்குநரும்கூட. `பிக் பாஸ்’ ஜூலியின் கழுத்தில் அவர் அரிவாளை வைத்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது உலாவருகிறது. `என்னாச்சு பாஸ்?’ என பகுர்தீனிடம் கேட்டேன்.
`பிரச்னை எதுவும் இல்லை. நான் இப்ப எடுக்கிற விளம்பரப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துல அவங்கதான் நடிக்கிறாங்க. படத்துக்கான வேலைகள் ஒருபக்கம் போயிக்கிட்டிருந்தாலும் விளம்பரப் படங்கள் இயக்கிட்டுதான் இருக்கேன். ராமநாதபுரத்துல இருக்கிற இலாஹி ஷாப்பிங் மாலுக்காக ஜூலியை வெச்சு ஒரு விளம்பரம் எடுக்கலாம்னு யோசிச்சேன். அதை ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸா போட்டப்போ பயங்கர எதிர்ப்பு. ஒரே நெகட்டிவ் கமென்ட்ஸ்.
அப்புறம் முக்கியமான விஷயம், ஜூலி ஜூலிஎங்க ஊரு பொண்ணு. பரமக்குடி பொண்ணு. `பிக் பாஸ்’ல கலந்துக்கிட்ட எல்லோருக்குமே சினிமா பின்னணி இருக்கு. ஆனா, ஜூலிக்கு அப்படி எதுவும் இல்லை.
இதையும் படிங்க: என்னது விஷாலுக்கு அண்ணியா வரலக்ஷ்மி வரப்போறாங்களா ! விவரம் உள்ளே ?
சூப்பர் மார்க்கெட் ஓனருக்கும் இதுல ஆரம்பத்துலயிருந்தே உடன்பாடில்லை. ஆனா, நான் பிடிவாதமா ஜூலிக்காக நின்னதும் ஓகே சொல்லிட்டார். ஜூலியை வெச்சு நான் விளம்பரம் எடுக்கிறது தெரிஞ்சதும் சென்னையில என் கம்பெனியோட வொர்க்கிங் பார்ட்னரா இருக்கிற ஹேமா மேடம், பார்ட்னர்ஷிப்பையே முறிச்சுக்கிட்டாங்க. அதுக்கும் ஜூலியோட கேரக்டரைத்தான் சொன்னாங்க. இப்படி எல்லாத் தரப்புலயும் எதிர்ப்பு வர வர, நான் ஜூலியை வெச்சு அந்த விளம்பரத்தை ஒரே நாள்ல எடுத்து முடிச்சேன்.
ஜூலியைப் பற்றி நீங்க இப்போ என்ன நினைக்கிறீங்க?
சினிமா ஆள்களைவிட செம திறமையான பொண்ணு. எதைச் சொன்னாலும் ஒரே டேக்ல பண்ணி அசத்திடுது. பழகுறதுக்கும் உண்மையான பொண்ணு. காயத்ரி, ஆர்த்தியைவிட ஜூலி நல்ல பொண்ணு. `அண்ணா’னு கூப்பிடுறப்போ அதுல உண்மை இருக்கும். `போட்டோஷூட், சினிமாவுல நடிக்கிறியாமா?’னு நான் கேட்டதும், `அண்ணன் படத்துல நடிக்காமையா?’னு சொல்லுச்சு.