பெயரை மாற்றி தனது ஜல்லிக்கட்டு போராட்ட புகைப்படத்தை பதிவிட்ட ஜூலி. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
76176
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை அசிங்கமாக கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. இதனால் மிகவும் மனம் நொந்த்து போன ஜூலி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படப்பிடிப்பில் மியா கலீபா. டேனி பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

அந்த வீடியோவில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அப்படி திட்டுகிறீர்கள், எப்போது முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து இப்போதும் ஏன் என்னை திட்டுறீங்க என்று புலம்பி இருந்தார் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் , ஜூலி தனது திரைப்படத் திட்டங்களைப் பற்றி அறிவிக்கத் தொடங்கினார், அதில் அவர் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். அவர் அறிவித்தபடி எந்த படமும் இப்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. அவர் நடித்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர்கள் யூடியூப்பில்மட்டும் வெளியானது.

-விளம்பரம்-

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், மரியா ஜூலியானா என்று இருந்த தனது பெயரை எம் ஜூலி என்றும் மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜூலியை கழுவி போற்றி வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு பொறுமையாக பதில் அளித்து வருகிறார் ஜூலி.

Advertisement