இரண்டாம் திருமணம் நின்றதுக்கு சங்கி தான் காரணம் – BJPயை பங்கம் செய்த காஜல்.

0
4573
kajal
- Advertisement -

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட தனது இரண்டாம் திருமணம் அறிவிப்பு போலியானது என்று காஜல் விளக்கமளித்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-215-1024x715.jpg

மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது….அடுத்த வாரம் திருமணம்….கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால், உண்மையில் இது வேடிக்கையாக போடப்பட்ட காப்பி பேஸ்ட் பதிவாம், தனக்கு மீண்டும் காதல் மற்றும் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார் காஜல்.

இப்படி ஒரு நிலையில் தனது திருமண பார்ட்டி நின்றுபோய் விட்டது. கடைசி நேரத்துல தான் மாப்பிள்ளை BJPயை சேர்ந்த சங்கினு தெரிஞ்சது என்று மீண்டும் வேடிக்கையாக கூறியுள்ளார் காஜல். நடிகை காஜல், சமூக பிரச்சனை குறித்தும் ஜாதி ஒழிப்பு குறித்தும் பதிவிட்டு வருகிறார். அதே போல பெரியார் கொள்கைகளை கடைபிடித்து வரும் காஜல், பா ஜ கவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தைரியமாக தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வலுத்த போது இவர் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-220-1024x910.jpg

நடிகை காஜல், BJP எதிராக பல முறை பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலின் போது கூட காஜல் பசுபதி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘no vote to BJP’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த முகநூல்வாசி ஒருவர், என்ன சொல்ல வரீங்க என்று கேட்ருந்தார். இதற்கு பதில் அளித்த காஜல் பேட்ட பட ரஜினி ஸ்டில்லை போட்டு அப்படியே ஓடி போய்டு என்று பதில் அளித்துள்ளார். மேலும், அந்த நபர் பிஜேபி ஆதரவாளர் என்பதையும் அவர் பி ஜே பி வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று போட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட காஜல், பாரத் மாத்தாகி ஜாய். வெளிய போடா #Gobackmodi #Veleyapodasangi என்று பங்கம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement