ஒட்டி உராசியா ராஷ்மிகா – National Crush என்றும் பாராமல் கடுப்பாகி காஜல் போட்ட பதிவை பாருங்க. (கான்டாகிட்டாங்க போல)

0
737
Rashmika
- Advertisement -

தளபதி 66 பட பூஜையில் விஜய்யுடன் ஒட்டி உரசிய ராஷ்மிகாவால் டென்சன் ஆகி இருக்கிறார் காஜல் பசுபதி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி.காஜல் முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்தார். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Thalapathy66

பின் காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காஜல் கலந்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

national crush ராஷ்மிகா :

மேலும், கஜோல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சினிமா, நாட்டு நடப்பு என்று பல விஷயங்களைப் பற்றிப் போஸ்ட் போடுவார். அதுமட்டுமில்லாமல் சிலரை பங்கமாக மரண கலாய் செய்து இருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகா குறித்து இவர் போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ராஷ்மிக மந்தனா.

This image has an empty alt attribute; its file name is 1-108-1024x761.jpg

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். தெலுங்கில் பிரபலமடைந்த ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

-விளம்பரம்-

விஜய்க்கு ஜோடியான ராஷ்மிகா :

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 66 படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகாவின் ஓவர் ரியாக்ஷன் :

இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏற்கனவே இவர் விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களிலேயே விஜய்க்கு ஜோடி சேருவதாக இருந்தது. ஆனால், எப்படியோ மிஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் தளபதி 66 படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பட பூஜையில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட படங்கள், அவர் எந்தளவுக்கு பெரிய விஜய் ரசிகை என்பதைக் காட்டுகின்றன.

This image has an empty alt attribute; its file name is 1-152-1024x682.jpg

கடுப்பான காஜல் :

ஆனால், ராஷ்மிகாவின் இந்த ரியாக்ஷனை கண்டு சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ராஷமிகா விஜய்யுடன் ஒட்டி உரசிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை காஜல் பசுபதி ‘தள்ளி நில்ரி ‘ என்று கடுப்பாகி பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு ராஷ்மிகாவின் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது.

Advertisement