பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமாகியுள்ள சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு செய்தியை அறிந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஆனந்த கண்ணனுடன் சன் மியூசிக்கில் பணியாற்றிய காஜல் பசுபதி, ஆனந்த கண்ணன் குறித்து மிகவும் வேதனை பட்டுள்ளார். ஆனந்த கண்ணன் சன் மியூசிக்கில் பணியாற்றிய போது அவருடன் பணியாற்றிய பலர் அவருடன் தொடர்பில் இல்லை. அவருடன் பணிபுரிந்த ஒரு சிலருடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்தார். அதிலும், அவர் சிங்கப்பூர் சென்ற பின்னர் அந்த நட்பு வட்டாரமும் குறைந்தது.

இருப்பினும் சென்னை வந்தால் தனது பழைய நண்பர்களை ஆனந்த கண்ணன் சந்தித்துவிடுவார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆனந்த கண்ணன் காஜல் பசுபதியுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி இருந்தார். அப்போது அந்த புகைப்படத்தையும் பகிர்ந்தார் காஜல் பசுபதி. இப்படி ஒரு நிலையில் ஆனந்த கண்ணனின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து உள்ளார் காஜல்.

இதையும் பாருங்க : போன சீசன்ல சத்யா – ரம்யா, இந்த சீசன்ல இவங்கள – Mr&Mrs சின்னத்திரையில் இருந்து திடீரென வெளியேறிய இளம் போட்டியாளர்கள்.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள அவர்,அவன் மதியமே இருந்துட்டு இருக்கான், ஆனா யாரும் போஸ்ட் பண்ணல, அவன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பான். நீங்கள் திரையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்களா அப்படி தான் அவன் நிஜத்திலும் இருப்பான். இறுதியாக அவன் இந்தியா வந்த போது ஒரு பேட்டியில் தான் அவனை சந்தித்தேன்.அதன் பின்னர் அவனை பார்க்கவில்லை, எனக்கு போன் செய்றேன்னு சொல்லிட்டு போனான். ஆனால், போன் பண்ணல. அவனுக்கு எதோ கேன்சர் என்றெல்லாம் சொல்றாங்க அத பத்தி எனக்கு தெரியவே தெரியாது.

அவனுக்கு எப்படி கேன்சர் வந்துச்சுனே தெரியல அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அவனுக்கு இப்படி எல்லாம் இருந்துச்சி, அத பத்தி நமக்கு எதுவுமே தெரியலனு அசிங்கமா இருக்கும்.மேலும், சன் மியூசிக்கில் இருந்த வரை நல்லா இருந்தாரே அப்புறம் ஏன் அவர் சிங்கப்பூர் போனார் என்று காஜலிடன் கேட்கப்பட்டதற்கு, அங்கே அவனுக்கு பிஸ்னஸ் நல்லா போச்சி, அதன் பின்னர் ஒரு படம் பண்ணான், அவனும் பிரஜனும் சேர்ந்து பண்ணாங்க அது என்ன ஆச்சின்னு எனக்கு தெரியல. மேலும், சன் மியூசிக்ல இருந்தவங்க எல்லாம் ஒரு ரீ – யூனியன் பண்ணலாம்லா சொல்லிட்டு இருந்தான்

Advertisement
Advertisement