போன சீசன்ல சத்யா – ரம்யா, இந்த சீசன்ல இவங்கள – Mr&Mrs சின்னத்திரையில் இருந்து திடீரென வெளியேறிய இளம் போட்டியாளர்கள்.

0
2667
mr&mrs
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.

-விளம்பரம்-

இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் – நந்தினி, மணிகண்டன் – சோபியா, வேல்முருகன் – காலா, யுவராஜ் – காயத்ரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

இந்த 12 போட்டியாளர்களில் பிரபல நடிகையின் அண்ணன் அண்ணியும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர். அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் தான்.இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகை சோபியாவை திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சோபியா, அட்டகத்தி, லட்சுமி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மணிகண்டன் – சோபியா ஜோடி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை. கடந்த சீசனில் கூட ரம்யா – சத்யா தம்பதி திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியிரினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement