vjs ஜோடியா மூனு சீரியல் நடிகை, இதுக்கு நானும் அத பண்ணி இருக்கலாம் போல – விக்ரம் படம் குறித்து காஜல் போட்ட பதிவு.

0
611
kajal
- Advertisement -

விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பிக் பாஸ் நடிகை காஜல் வருத்தத்துடன் பதிவிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-72.jpg

படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இந்த படத்தில் ஷிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி என்று மூன்று சின்னத்திரை நடிகைகள் நடித்துள்ளனர்.

- Advertisement -

Vjs ஜோடியாக 3 சீரியல் நடிகைகள் :

இந்த படத்தில் இவர்கள் மூவரும் கமிட் ஆகி இருக்கின்றனர் என்று அறிவிப்பு வெளியான போதே கமலுக்கு ஒரு ஜோடி, விஜய் சேதுபதிக்கு ஒரு ஜோடி, பகத் பாசிலுக்கு ஒரு ஜோடி என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த படத்தில் இவர்கள் மூவரும் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளாக நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் இவர்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து இருந்தனர்.

காஜலின் வருத்தமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிக்க முடியவில்லயே என்று பிரபல நடிகை காஜல் பசுபதி பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘சீரியல் ஆர்ட்டிஸ்ட் மூன்று பெரும் கமல் சார் படத்துல, விஜய் சேதுபதி ஜோடியா. சூப்பர் ஜி, எதுக்கு நாங்களும் சீரியல பண்ணி இருக்காமல் போல என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீங்களே ஏற்கனவே சில படங்களில் கலக்கி இருக்கின்றனர்’ என்று ஆறுதல் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கமல் படத்தில் அறிமுகம் :

அதற்கு காஜல் ‘தற்போது தாமதமாக தான் சீரியல் நடிகைகளை பெரிய படங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்’ என்று கூறியுள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல்.

காஜலின் தற்போதை நிலை :

அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் சமீப காலமாக எந்த ஒரு டிவி நிகழ்ச்சியிலோ படங்களிலோ காண முடிவது இல்லை.

Advertisement