கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ. என். வி. இலக்கிய விருது சிறந்த மலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி. குரூப்நினைவாக கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதல்முறையாக, ஒரு தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஞானபீடம் பெறும் கவிஞர்களுக்கே ONV இலக்கிய விருது வழங்கப்பட்டு வரும் சூழலில், வைரமுத்துவின் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவிற்கு இந்த விருது கிடைத்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரை ஸ்டாலின் வைரமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் பாருங்க : அப்போ அதுக்கு பொங்குன நீங்க PSBB பிரச்சனைக்கு பொங்கமாட்டீங்களோ ஏன்னா நடந்தது உங்கவாள் ஸ்கூல்ல – ரசிகர் கேட்ட நச் கேள்வி. லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதில்.

Advertisement

அதில், தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக என்று ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

அதே போல கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கவிஞர் வைரமுத்து. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த சினமயி சும்மா இருப்பாரா. வைரமுத்துவை ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை போட்டு வாவ் என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இதற்கு நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல், சின்மயின் திருமணத்தில் வைரமுத்து கலந்துகொன்டு வாழ்த்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாவ் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ரசிகர் ஒருவர், சின்மயி, வைரமுத்து காலில் விழுந்து ஆசி வாங்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். சின்மயி, தனது திருமணத்திற்கு முன்பாக தான் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க சின்மயி திருமணத்திற்கு வைரமுத்து அழைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் நிலவி வருகிறது.

Advertisement
Advertisement