அப்போ அதுக்கு பொங்குன நீங்க PSBB பிரச்சனைக்கு பொங்கமாட்டீங்களோ ஏன்னா நடந்தது உங்கவாள் ஸ்கூல்ல – ரசிகர் கேட்ட நச் கேள்வி. லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதில்.

0
144530
lak
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணனுமும் இந்த சம்பவத்தால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

லட்சுமி ராமகிருஷ்ணன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக பல பிரச்சனைகளில் குரல் கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வழக்கில் சம்மந்தபட்ட 4 பேரையும் போலீசார் என்கௌண்டர் செய்த்ததால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இது குறித்து கூட லட்சுமி ராமகிருஷ்ணன் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : 5 வருட உறவு, மூன்று தடவை கருக்கலைப்பு, இப்போ கொலை மிரட்டல். முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நாடோடிகள் பட நடிகை பரபரப்பு புகார்.

- Advertisement -

அந்த விவாத நிகழ்ச்சியில் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மீரா மிதுன் விவாத நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறினார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்த நெட்சன் ஒருவர், ஆந்திராவில் நடந்த வன்புணர்வுக்கு பொங்குவீங்க ஹாசினிக்கெல்லாம் பொங்கி வந்த நீங்க இப்போ நடந்த #PSBBharassment க்கு பொங்கமாட்டீங்களோ ஏன்னா நடந்தது உங்கவாள் ஸ்கூல்ல அப்படித்தானே.

லட்சுமி ராமகிருஷ்ணன், இதுபற்றி ஒரு விவாதம் செய்யலாமே என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் பொங்கல என்ன பண்ணலாம்? எதாவது ஐடியா இருக்கா என்று பதிவிட்டுள்ளார். அதே போல மற்றொரு பதிவியில், எங்க உங்க கோவத்தலாம் இப்போ #PSBB #psbbschool issue ல காட்டுங்க பாப்போம்.நூல் இடைஞ்சல் இல்லாம அநீதிக்கு எதிரா குரல் கொடுங்க பாப்போம் என்று பதிவிட்டு மதுவந்தி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோரை டேக் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த லட்சுமி, PSbb பள்ளியில் ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது மிகப்பெரிய குற்றம். ஆனால், அத்தகைய தீவிரமான பிரச்சினை கூட அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது !! இது நம் சமூகத்தை அழிக்கக்கூடிய ஒரு வகை நோய் !! சோகம் !! இதை ட்வீட் செய்ததைப் போன்ற சாதிவாதிகளால் கோர் பிரச்சினை நீர்த்துப்போகாது என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement