‘நீ மூடு’ – அரசியல் பேசிய மதன் கௌரியை ஒரே வார்த்தையில் ஆப் செய்த காஜல். அப்படி என்ன போட்டுள்ளார் பாருங்க.

0
420
kajal
- Advertisement -

இந்திய அரசியல் குறித்து மதன் கௌரி போட்ட பதிவிற்கு ஒரே ஒரு வார்த்தையில் பதிலடி கொடுத்த காஜலின் பதிவு வைரலாகி வருகிறது. பொதுவாகவே யூடியூப் பலருக்கு பொழுது போக்கு தளமாக இருந்தாலும் சில பேருக்கு வருமானம் ஈட்டும் தளமாக அமைந்து வருகிறது. யூட்யூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் மதன் கௌரி. இவர் யாரும் அறியாத பல சுவாரசியமான தகவலை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலமாகவே மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியும் வகையில் எளிதாக தமிழில் இவர் சொல்கிறார்.அது மட்டுமில்லாமல் இந்தியாவில் நிலவும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன் வைக்கிறார்.மேலும், மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தான் இவர் அசால்டாக பிரபலமானார் என்றுகூடச் சொல்லலாம்.

- Advertisement -

யூடுயூபர் மதன் கௌரி :

தற்போது இவர் ஒரு மாதத்திற்கு கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மதன் கௌரி தன் டுவிட்டரில் பிரபல கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.அந்த ட்வீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் எலான் மஸ்க் பதில் அளித்திருந்தார். அதில் அவர், இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதனால் மின்சார வாகனம் இறக்குமதி சற்று தாமதம் ஆகிறது என்று பதில் அளித்து இருந்தார்.

மதன் கௌரிக்கு பதிலடி கொடுத்த காஜல் :

இப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உலகமே வியந்து பார்க்கும் ஒரு சிஇஓ ட்விட்டரில் பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மதன் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். அடிக்கடி அரசியல் குறித்தும் விமர்சிக்கும் மதன் கௌரி சமீபத்தில் ‘இந்தியாவிற்கு ஒரு பலமான எதிர்கட்சி தலைவர் தேவைப்படுகிறது’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பிக் பாஸ் நடிகை காஜல் ‘நீ மூடு’ என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

தொகுப்பாளினி to நடிகை :

காஜல் முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்தார். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Bjpயை வச்சி செய்யும் காஜல் :

அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமூக பிரச்சனைகள் குறித்து மிகவும் தைரியமாக பதிவிட்டு வருகிறார். அதே போல இவர் அடிக்கடி Bjp கட்சியினரை சமூக வலைதளத்தில் வச்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மதன் கௌரியின் இந்த பதிவு காங்கிரஸ் கட்சி பலமான எதிர்கட்சி இல்லை என்பது போல குறிப்பிடப்படுவதாலோ என்னவோ காஜல் இப்படி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement