ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்து விட்டு பிரச்சனை செய்ததாக சொன்ன இயக்குனர் – Idஐ போட்டு நாறடித்த காஜல்

0
2522
kajal
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை விஜய் டிவி தான் ரியாலிடி நிகழ்ச்சிகளின் ராஜாவாக திகழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய்டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கண்டு காண்டாகி இருக்கிறார் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
kajal

நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

- Advertisement -

காஜல் நடித்த படங்கள் :

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். தற்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவ்வப்போது சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

பொய் கூறிய இயக்குனர் :

இந்த நிலையில் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டு பொய் கூறிய இயக்குனரை வறுத்தெடுத்து இருக்கிறார் காஜல் பசுபதி. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடித்து முடித்த ஒரு படத்திற்காக காதல் வசதிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் அதை காதல் கேட்டபோது அவரது பெயரை எடுக்கும் வகையில் காதல் சூட்டிங் ஸ்பாட்டில் முடித்துவிட்டு கலாட்டா செய்ததாக கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

கிழித்தெடுத்த காஜல் :

இதனால் கடுப்பான காஜல் பசுபதி தற்போது வந்த இயக்குனரை கிழித்தெடுத்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் காசு கொடுக்க வக்கு இல்லன்னா கூட விட்டுவிடலாம். ஆனால், நான் பண்ணாத விஷயத்தை சொல்லி என் பெயரை கெடுத்து என் கெரியரை கெடுக்க நினைக்கிற எச்ச என்று கடுமையாக பதிவிட்டதோடு கெட்ட கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டி இருக்கிறார். மேலும், மற்றொரு பதிவில் தன்னை ஏமாற்றிய இயக்குனரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவிட்டு அவரை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

Advertisement