திடீர்னு நடந்துடிச்சி - தனது இரண்டாம் திருமணம் குறித்து அறிவித்த காஜல் பசுபதி.

By Rajkumar · 30/6/2021

நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் தனது இரண்டாம்திருமணம் குறித்து அறிவித்து உள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் 'நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

இதையும் பாருங்க : செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - மாடர்ன் ட்ரெஸ்ல 'மக்க கலங்குதாப்ப'வ பாத்த மாதிரி இருக்கே. வைரல் வீடியோ.

எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.

ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.இந்த நிலையில் நடிகை காஜலுக்கு விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full