செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி – மாடர்ன் ட்ரெஸ்ல ‘மக்க கலங்குதாப்ப’வ பாத்த மாதிரி இருக்கே. வைரல் வீடியோ.

0
1377
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த 2019 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ் – ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

விஜய் டிவயில் கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றது. இதற்கு முன்னர் பல சமையல் நிகழ்ச்சிகள் வந்தாலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அளவிற்கு ரீச் ஆகவில்லை. இப்படி ஒரு நிலையில் சன் தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் செஃப்’ என்ற புதிய நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியானது.

ஆரம்பமே அட்டகாசம்... வைரலாகும் விஜய் சேதுபதியின் குத்தாட்டம்

மாஸ்டர் செஃப் ஒன்னும் புதிய கான்செப்ட் கிடையாது. 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். பிரிட்டனில் முதல்முறையாக மெகா ஹிட்டான இந்த நிகழ்ச்சி பல நாடுகளிலும் ஒளிபரப்ப பட்டது. இப்படி ஒரு மாஸ்டர் ‘செஃப்’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஆட்டம், பாட்டம் என்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் போது தர்மதுரை படத்தில் வந்த மக்க கலங்குதப்பா பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement