நீங்க காவி ட்ரெஸ் போட்டிற்கும்போதே தெரியும் - கே டி ராகவனை மறைமுகமாக கலாய்த்த காஜல், ரசிகர்கள் ரியாக்ஷன்.

By Rajkumar · 28/8/2021

தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவனின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்து இருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் தன்னுடைய மதன் டைரி என்ற யூடுப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், அண்ணாமலை சொன்ன பின்னர் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறி இருந்தார்.

அந்த வீடியோவில் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள் என்று கூறி சில ஷாக்கிங் ஆதாரங்களை காண்பித்துள்ளார் மதன்.

இதையும் பாருங்க : வடசென்னை 2 முன்பாக 'ராஜன் வகைரா' - சிறு வயது ராஜனாக நடிக்க போகும் பிரபல வாரிசு நடிகர். யார் பாருங்க.

மேலும், அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை தான் வெளியிட்டதாக கூறினார், ஆனால், அண்ணாமலையே, ராகவன் தொடர்பாக மதன் என்னை நேரில் சந்தித்தது உண்மை தான் என்றும் முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் `செய்து கொள்ளுங்கள்’ என்று சுருக்கமாக முடித்து விட்டேன் என்று கூறி இருந்தார்.

இந்த விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலர், கே டி ராகவனை கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி, கே டி ராகவனை மறைமுகமாக கேலி செய்து உள்ளார். சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் காஜல். அதில், முடி வெட்ட போறேன் உறவுகளே, ராகவா மாறி வாய் எக்ஸ்பிரஷன் வர்லையே என்று கேலியாக பதிவிட்டுள்ளார். நீங்க காவி ட்ரெஸ் போட்டு இருக்கும் போதே தெரியும் தோழி புரிஞ்சி போச்சி உங்க ஊழல் என்று கமன்ட் செய்தார். இதற்கு காஜல், எவ்ளோ ட்ரெஸ்ஸ வேஸ்ட் பண்றது என்று கமன்ட் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full