தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து ‘விடுதலை’ சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ போன்ற படங்களை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்தது.
இந்த படத்தின் கதையை வெற்றி மாறன் 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுத தொடங்கி இருந்தார். மேலும் , வடசென்னை படம் நிறைவடைந்த போதே இந்த படத்தின் 2 ஆம் பாதியை பாதி முடித்து வைத்திருந்தார் வெற்றி மாறன். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் ப்ரீகுவலை எடுக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.
இதையும் பாருங்க : ரஞ்சித்தின் கருத்து வளர்ந்துவரும் கலைஞர்களை பலி கொடுத்துவிட்டது – வெளுத்து வாங்கிய ஈழப் பாடகர்.
வட சென்னை படம் வருவதற்கு முன்னபாக ‘ராஜன் வகைரா’ என்ற தொடரை எடுக்க ஏற்கனவே வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். . அதில் ராஜன் கதாபாத்திரம் எப்படி ஒரு கோட்டையை உருவாக்கினார் என்பதை படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதனை வெப் சீரியஸாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறி இருந்தார்.
ராஜன் வகையறா என உருவாகவுள்ள சீரிஸில் ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரை காட்சி படுத்த உள்ளாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கவுள்ளதாக கூறபடுகிறது, இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.