தன்னை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள கேட்ட முகநூல் வாசிக்கு காஜல் பசுபதி செம பதிலடி கொடுத்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.
மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல்.
ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம்.
சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார். சாண்டியுடன் பிரிந்தாலும் தற்போது சாண்டி மற்றும் அவரது குடும்பத்தாருடன் நல்ல உறவுடன் இருந்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல், அடிக்கடி பல thug life சம்பவங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் முகநூலில் ஒரு காஜல் பசுபதிக்கு மெசேஜ் செய்து இருக்கிறார். அதில் ‘உன்னை போன்ற நபரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்களின் தீவிர ரசிகர் நான். என்னுடைய தென்னிந்திய பிரியங்கா சோப்ரா. ஐ லவ் யூ காஜல், உன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
ரசிகர் அனுப்பிய அந்த மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த காஜல் வடிவேலு பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘செத்துருவடா’ என்று வேடிக்கையாக கூறி இருக்கிறார். ஏற்கனவே முகநூலில் ரசிகர் ஒருவர் காஜலிடம் நீங்கள் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததற்க்கு பதில் அளித்த காஜல் ‘ நிஜமா சொல்றேன் என் டார்ச்சர் தாங்க மாட்டாங்க பசங்க அவங்க நலனை கருதி வேற கல்யாணம் வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்’என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.