மஹத், யாஷிகா சர்ச்சை.! குப்பை கொட்டிய ஐஸ்வர்யா.! பச்சை பச்சையாக திட்டிய காஜல்.!

0
504
- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா ‘மஹாராணி’ டாஸ்கின் போது செய்த சில அத்துமீறிய செயல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் கலந்து கொண்ட காஜல், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்க்கையில் ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத்தை வறுத்தெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

Mahat yashika

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜலிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த காஜல் ‘சென்ற நிகழ்ச்சியை போல இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை. அதனால் நான் தினந்தோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவேன்.

இந்த நிகழ்ச்சியில் யாஷிகா, மஹத், ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்யும் செயல்களை பார்க்கமுடியவில்லை. என்னதான் யாஷிகா மற்றும் மஹத் இருவரும் நண்பர்கள் என்றாலும் ஒரு பேட்டில் கட்டிப்பிடித்து படுத்துக்கொள்வதை பார்க்கும் போது கேவலமாக உள்ளது.பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற நடந்துகொள்வது தவறு.’ என்று மஹத் மற்றும் யாஷிகாவை கிழித்துள்ளார்.

-விளம்பரம்-

Mahat

அதே போல பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த காஜல் ‘பாலாஜி பத்தி எனக்கு நன்றாக தெரியும், அவர் கேட்ட வார்த்தை பேசியது தப்பு தான். ஆனால், அவர் டாஸ்கில் இல்லாத போது அவர் மீது அந்த பொண்ணு குப்பை கொட்டியது மிகவும் தவறு. ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை டிவியில் பார்க்கும் போது எனது அருகில் என்னுடைய அம்மா இருப்பதை கூட பார்க்காமல் ஐஸ்வர்யாவை பச்சை, பச்சையாக திட்டினேன்.

Aishwarya

அவரை விட வயதில் பெரியவரை இப்படி அசிங்கபடுத்தியதை பார்க்கும் போது எனக்கும் பிபி ஏறியது. அதே போல சென்றாயனை நாய் என்று எப்படி திட்டலாம், வயதிற்கென்று ஒரு மரியாதையை இல்லையா. ஐஸ்வர்யா குப்பை கொட்டிய போது பாலாஜி அவர் மீது மீண்டும் குப்பையை கொட்டி இருக்க வேண்டும் நான் எதிர்பார்த்தேன் . பேட்டில் ரொமான்ஸ் செய்வது சரி என்றால் பாலாஜி ஒருவேலை அப்படி செய்திருந்தாலும் சரியாக இருந்திருக்கும். ‘ என்று ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்துள்ளார்.

Advertisement