சாக்க்ஷி குறும்படம்.! ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் போட்டியாளர் காஜல்.!

0
8251
Kajal
- Advertisement -

பிக் நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் ஆன நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு போர்க்களம் போல காட்சி அளித்தது. நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா அன் கோ தான் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீட்டையும் அலற விட்டனர். இந்த சண்டையில் லாஸ்லியாவும் பாதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-
Sakshi

நேற்று நடைபெற்ற சண்டைக்கு காரணமே சாக்க்ஷி தான். கடந்த திங்கள் கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் முகன் மற்றும் மீரா பேசுகையில், நான் உன்னிடம் பேச நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் யாரிடம் எல்லாம் நெருஙகி பேசுகின்றேனோ அவர்களை என்னிடம் இருந்து பிரிக்க சதி செய்கிறார்கள் என்றார். அதே போல நீ யாரிடம் வேண்டுமேனாலும் பேசிக்கொள்ள என்றார் மீரா.

இதையும் பாருங்க : இவர் தான் இந்த வார எலிமினேஷன்.! அடித்துக் கூறிய பொன்னம்பலம்.!

- Advertisement -

ஆனால், அதனை அவ்வழியாக சென்ற சாக்க்ஷி ஒட்டு கேட்டுவிட்டு பின்னர் அபிராமி மற்றும் வனிதாவிடம் சென்ற சாக்க்ஷி , முகினிடம் அபிராமியுடன் பேச கூடாது என்று மீரா சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கொளுத்தி போட்டு விட்டார். அதன் பின்னரும் அபிராமியிடம் நன்றாக ஏற்றிவிட்டார் சாக்க்ஷி.

இந்த சண்டையை அடுத்து சாக்க்ஷிக்கு கண்டிப்பாக ஒரு குறும்படம் போட வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் சாக்க்ஷியின் குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல்.

-விளம்பரம்-

Advertisement