முகென் பக்கம் தலைவைக்க கூடாது.! கமல் விட்ட டோஸ் கண் கலங்கி அழுத அபிராமி.!

0
2845
abhirami
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர்கள் ரொமான்ஸ் ஒரு புறம் இருக்க அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் விடாமல் முகெனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார் அபிராமி.

இதையும் பாருங்க : பிக்பாஸே ஏற்றுக்கொண்ட சிஷ்யன்.! இதுவரை யாரையும் இப்படி செல்லப்பெயர் வைத்து அழைத்ததே இல்லை.! 

- Advertisement -

இதனால் மற்ற போட்டியாளர்களும் முகென் அபிராமியல் கவனத்தை சிதறவிட்டு எதற்காக வந்தேன் என்பதை மறந்து கொண்டு இருக்கிறார் என்று புலம்பி வந்தனர். அதே போல பார்வையரல்களுக்கும் இதே எண்ணம் தான் தோன்றியது. இந்த நிலையில் இவர்கள் இருவர் காதல் கதைக்கும் கமல் நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் truth or dare என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது அப்போது கமல் அபிராமியிடம் முகெனிடம் வைத்திருப்பது நட்பா ? காதலா ?என்று கேட்க, அதற்கு அபிராமியும் தைரியமாக அது காதல் தான் முகெனை நான் காதலிக்கிறேன் என்று கூறினார். ஆனால், அப்போதும் நான் தெளிவாக இருக்கிறேன் அது காதல் எல்லாம் கிடையாது வெறும் நட்பு மட்டும்தான் என்றுகூறியிருந்தார்.

-விளம்பரம்-

அதன்பின்னர் அபிராமிக்கு அறிவுரை வழங்கிய கமல் உங்கள் காதல் விளையாட்டு பார்வையாளர்களுக்கு வேறுவிதமாகவும் தோன்றுகிறது. அதே போல உங்களின் காதல் முகனின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. என்றும் பதிவு செய்தார். இதனால் இனி காதல் என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று கமல் அபிராமிக்கு அறிவுரை செய்தார்.

பின்னர் கமலின் அறிவுரையை ஏற்று அபிராமி இனி கண்டிப்பாக அப்படி இருக்காது என உறுதியளித்தார். அதன்பின்னர் முகெனிடம் நானும் இனி நட்பாகவே பழகுவேன் என்று பேசி இருந்தார். அப்போது அவரிடம் தலையாட்டிவிட்டு அபிராமி அதன் பின்னர் போட்டியாளர்களுடன் தேம்பித் தேம்பி அழுதார். இருப்பினும் ஒருவழியாக அபிராமியின் காதல் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்தது ரசிகர்களுக்கு என் நிம்மதியை அளித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement