இன்று வெளியேற போவது யார்.! கமல் காப்பாற்றிய நபரை கண்டு ஷாக்கான கஸ்தூரி.!

0
18316
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. 

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தர்ஷன், சாண்டி, சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் நடந்து வந்த ஓட்டிங்கில் கஸ்தூரிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இவரோ பிக் பாஸ் வீட்டுக்குள் பொட்டி பாம்பாய் இருந்து வருகிறார். எனவே, ஒரு வேலை இவரை இந்த வாரம் சீக்ரெட் ரூமில் வைத்தால் கஸ்தூரியை பற்றி போட்டியாளர்கள் பேசுவதையாவது கேட்டு மீண்டும் உள்ளே போனால் ட்விட்டரில் பொங்கிய பாதி அளவாவது கஸ்தூரி பொங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement