நாகர்ஜுனாவ பாத்து கத்துக்கோங்க கமல் சார் – தெலுங்கு பிக் பாஸில் பெண்களுக்காக குரல் கொடுத்த நாகர்ஜூனாவை சுட்டிக்காட்டும் ரசிகர்கள்.

0
459
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் என்றாலே வாரம் ஒரு பஞ்சாயத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன் – அர்ச்சனா விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன், அர்ச்சனா வாடி போடி, கருமம், மூஞ்ச பாரு என்று படு கேவலமாக பேசி இருந்தார். மேலும், இனி வினுஷா பத்தி பேசுனா சொருகிடுவேன் என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

நிக்சனுக்கு ஆதரவா :

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கமல், நிக்சனை கண்டித்ததோடு அவருக்கு எல்லோ கார்ட்டையும் கொடுத்தார். ஆனால், ஆட்டிகிட்டு, தொளலத் போன்ற வார்த்தைகளை பேசிய தினேஷை கடுமையாக விமர்சித்தார் கமல். அதிலும் நார்த் மெட்ராஸில் இப்படி தான் பேசுவார்கள் என்று சொல்ல நீங்கள் யாரு என்றெல்லாம் கேட்டு இருந்தார். மேலும், என்ன அவர் எந்த ஏரியா என்பது முக்கியமல்ல, ஒரு ஏரியாவை பொறுத்து ஒருவரை Brand செய்யாதீர்கள்.

இனி அப்படி பேசாதீங்க நிக்சன், இல்லை என்றால் உங்களை இப்படி தான் Brand செய்வார்கள் என்று நிக்ஸ்னுக்கு ஆதரவாக பேசி இருந்தார். அதே போல பூர்ணிமாவை ஆட்டிகிட்டு பொறுமையா வாங்க என்று தினேஷ் சொன்னதற்கு மன்னிப்பும் கேட்க வைத்தார். பூர்ணிமாவை, தினேஷ் ‘ஆட்டிகிட்டு வரீங்க’ என்று சொன்ன வார்த்தையை பெரிய கெட்ட வார்த்தை போல தினேஷை வெளுத்து வாங்கிய கமல், தினேஷை பூர்ணிமாவிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.

-விளம்பரம்-

மாயா பூர்ணிமா :

ஆனால், இதே வார்த்தையை பூர்ணிமா பேசியது குறித்து கமல் இதுவரை எதுவும் கேட்கவில்லை.அவ்வளவு ஏன் நிக்சன், வினுஷா குறித்து பேசிய விஷயத்தை கேள்வி கேட்க வினுஷா இங்கு இல்லை, எனவே அதைபற்றி பேசாதீர்கள் என்றும் கூறி இருந்தார். இப்படி கமல் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று பலரும் கழுவி ஊற்றிவரும் நிலையில் தெலுங்கு பிக் பாஸில் பெண் போட்டியாளரை ஆண் போட்டியாளர் ச்சீ என்று சொன்னதற்கே வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் நாகர்ஜுனாவை பார்த்து கமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற நாமினேஷனின் போது போட்டியா ஒருவர் பெண் போட்டியாளரை பார்த்து அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக சைகை காண்பித்து பேசியிருந்தார். இதுகுறித்து வார இறுதியில் கேட்ட நாகர்ஜுனா அந்த போட்டியாளரை வெளுத்து வாங்கியதோடு அவருக்கான குறும்படத்தையும் போட்டுக் காண்பித்து சம்பந்தப்பட்ட அந்த பெண் போட்டியாளர் ஏன் அப்போதே இதை கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement