பாக்கியலட்சுமியாக நடிக்கும் பிக் பாஸ் கஸ்தூரி – அட, பொய் இல்லைங்க உண்மையா தான். விவரம் இதோ.

0
2680
- Advertisement -

பாக்கியலட்சுமி தொடரில் நடிகை கஸ்தூரி நடிக்க இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. கல்லுரியில் படிக்க பாக்கியா ஆசைப்படுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா கல்லூரிக்கு செல்ல சம்மதம் சொல்கிறார்கள். ஆனால், இனியாவிற்கு மட்டும் இதில் விருப்பமில்லை. இனி கோபி, பாக்கியாவிடம் சண்டை போடுவாரா? இனியாவிற்கும் பாக்யாவிற்கும் பிரச்சனை வருமா? பாக்கியா தன்னுடைய கனவை நிறைவேற்றுவாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியல் குறித்த தகவல்:

இந்தத் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மூன்று வருடங்களை கடந்து விட்டது. தற்போது இல்லத்தரசிகளின் ஃபேவரட் பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, பாக்கியலட்சுமி சீரியலின் தமிழ் காப்பரிமையை பெற்று தெலுங்கு மொழியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இன்டி குரு லட்சுமி என்ற பெயரில் இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

தெலுங்கில் பாக்கியலட்சுமி:

இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அதாவது தமிழ் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடிக்க இருக்கிறார். இவரை அடுத்து இந்த சீரியலில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

கஸ்தூரி திரைப்பயணம்:

அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.

Advertisement