டந்த ஒரு வாரமாக சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்தது. கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மழைவிட்ட போதிலும் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கி இருக்கிறது. அதனை சரி செய்யும் பணியில் தொடர்ந்து மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல தன்னார்வளர்கள் உதவி செய்து வரும் நிலையில் பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Advertisement

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக கமலஹாசனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கமல் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவரிடம் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலில் ஏரி குளம் விற்று பிளாட் போட்டு வீடு கட்டுகிறார்கள் என்ற விமர்சனத்திற்குரிய வரி வந்திருக்கும்.இது குறித்து உங்கள் கருத்து என்று கேட்டதற்கு கமல், உங்களுடைய கருத்துக்களை தான் நான்

அந்த பாடலில் சொன்னேன். தனியாக கமலஹாசன் கல்வெட்டில் செதுக்கியது கிடையாது. ஏரி, குளங்கள் எல்லாம் பிளாட் போட்டு விற்கும் போது அது என்ன என்று விசாரித்து தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். வீடு கிடைத்தால் போதும் என்று அதன் மேலே மணல், கல்லை போட்டு வீடு கட்டிக்கொண்டு அதற்குப் பிறகு அரசாங்கத்தை குறை சொல்வது தவறில்லை.இதற்கு எல்லாருமே தான் காரணம்.

Advertisement

அதை நம்மால் என்ன சரி செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர குறை சொல்லி இருக்க வேண்டிய நேரம் இது கிடையாது. ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் எல்லா உதவிகளும் அரசாங்கமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. உடனடியாக செய்ய வேண்டும் என்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்றும் கூறி இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் கமலின் இந்த கருத்தை விமர்சித்து இருக்கும் கஸ்தூரி ‘That படுத்தே விட்டானய்யா moment.மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது’ என்று விமர்சனம் செய்து இருக்கிறார்.

Advertisement