தீவட்டி எல்லாம் இல்லை. தே***யா தான் கரெக்ட் – சர்ச்சை ட்வீட் செய்துவிட்டு டெலீட் செய்த பிக் பாஸ் 3 நடிகை.

0
1887
kasthuri
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.. அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது பந்து வீச்சாளர் திவாட்டியா தான். 4 ஓவர் வீசிய அவர் 37 ரன்கள் குடுத்து வாட்சன், சாம் குரன், ஜெய்க்வாத் போன்றவர்களை விக்கட்களை கைப்பற்றினர். இப்படி ஒரு நிலையில் திவாட்டியா என்ற பெயரை இரட்டை அர்த்ததில் கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போது கஸ்தூரி ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதில், இந்த பையன் தேவாடியா வச்சு செய்றான் நம்மளை (அட, பேரே அதுதான்ப்பா. நான் சீரியசா சொல்லிக்கிட்டு இருக்கேன்) என்று பதிவிட்டு இருந்தார். நடிகை கஸ்தூரியின் இந்த ட்வீட் வைரலாக பரவ ரசிகர்கள் பலரும் கஸ்தூரியின் இந்த டீவீட்டிற்கு எதிர்ப்பு தெரிய்வித்தனர். அதன் பின்னர் அந்த டீவீட்டை நீக்கிவிட்டார் கஸ்தூரி. பின்னர் அந்த ட்வீட்டிற்கான விளக்கத்தை மற்றொரு டீவீட்டில் போட்ட கஸ்தூரி. திவேதி, தீவட்டியெல்லாம் இல்லை. தேவாட்டியா தான் கரெக்ட்.

ஆனா இதுக்குனே அலையவரங்களுக்கு பேரு கூட கெட்ட வார்த்தையாதான் தெரியும். அட போங்கப்பா என்று ட்வீட் செய்து இருந்தார். கஸ்தூரி இந்த டீவீட்டை நீக்கினாலும். அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் கஸ்தூரி டெலீட் செய்த அந்த ட்வீட்டிற்கு கீழேயே மற்றும் ஒரு டீவீட்டை செய்து இருந்தார் . அதில் ‘தேவாட்டியா என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும். corrected. thx.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement