திமுகவுடன் கமலஹாசன் கூட்டணி வைத்தது குறித்து நடிகை கஸ்தூரி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

அதன் பின் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்காக கமல் பிரச்சாரம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து 142 சட்டமன்றத் தொகுதிகளில் கமல் தொடர்ந்து நிறுத்தினார். அதோடு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பின் மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வருகிறார்.
கமல் குறித்த தகவல்:
இதை அடுத்து கமலஹாசன் தன்னுடைய 68வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார். அப்போது பலரும் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதன் மூலம் இவர் திமுக கட்சியுடன் கூட்டணி வைப்பது தெளிவாக தெரிகிறது என்று பலரும் கூறி இருந்தார்கள். ஆனால், கமல் எதுவும் சொல்லவில்லை.
https://twitter.com/KasthuriShankar/status/1766418189075046712
கமல் கட்சி கூட்டணி:
இதை அடுத்து கமலஹாசன் அவர்கள் திமுக கட்சியில் கூட்டணி வைக்க போகிறாரா என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது. அதோட மக்கள் நீதி மையக் கட்சிக்கு மக்களை தேர்தலில் ஒரு தொகுதி அதாவது ஒரு சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கமலின் இந்த கட்சிக் கூட்டணி இணைப்புக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கமல் பேட்டி:
இதனை அடுத்து கமலஹாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், வர இருக்கும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களுடைய எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் கிடையாது நாட்டுக்கான விஷயம். இதனால் எங்கு கைகுலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சார செய்யும் தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
https://twitter.com/BehindTalkies/status/1766468375679828313
கஸ்தூரி பதிவு:
இப்படி கமல் அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கஸ்தூரி அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், திமுகவுக்கு கமல் விலை போனதில் ஆச்சரியம் கிடையாது. இவ்வளவு மலிவாக விலை போனதுதான் ஆச்சரியம். ஒரே ஒரு ராஜ சபா சீட். இது மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுடன் மையத்தில் இணைந்தவர்கள் கன்னத்தில் விழுந்த அறை என்று கூறியிருக்கிறார்.






