வெளியேறிய கஸ்தூரிக்கு பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பு.! கஸ்தூரி என்ன செய்தார் தெரியுமா?

0
2939
kasturi
- Advertisement -

. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. 

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தர்ஷன், சாண்டி, சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் நடந்து வந்த ஓட்டிங்கில் கஸ்தூரிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

எதிர்பார்த்ததை போல இன்று கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்த பின்னர் கமல், கஸ்தூரியை சீக்ரட் அறையில் வைக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், கஸ்தூரியோ நான் உள்ளே சென்று வனிதாவை போல எந்த ஒரு விஷயத்தையும் மாற்றப் போவது இல்லை. அதே போல என் குழந்தைகளின் குரலை கேட்ட பின்னர் எனக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்பது போல இருக்கிறது. அதனால் நான் ரகசிய அறைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

kasturi

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இவரால் எந்த திருப்பமும் ஏற்படவில்லை.எனவே, அவர் ரகசிய அறைக்கு சென்றிருந்தாலும் அதிலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement