4 பேர லவ் பண்றது காமெடியா.! கவினை வச்சு செய்யும் கஸ்தூரி.!

0
4471
Kasturi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது.

சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நபருடன் உரையாடி இருக்கும் கஸ்தூரி வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் நுழைய தயார் என்பது போல தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பதிவு போலியானது என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும், இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அதனை மறுத்து கஸ்தூரி ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். சென்ற முதல் நாளே போட்டியாளர் அனைவரையும் சிறப்பாக வெச்சி செய்தார் கஸ்தூரி.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ளார் முதல் ப்ரோமோவில் கவினிடம் பேசும் கஸ்தூரி, நாளு பேர லவ் பண்றது எல்லாம் காமெடியா, நீங்கள் ஜேம்ஸ் பான்ட் மாதிரி இருக்கும்னு எதிர் பார்த்தீங்க ஆனால், அது வடிவேலு காமெடி மாதிரி ஆகிடிச்சி என்று நக்கலடித்துளளார்.

-விளம்பரம்-
Advertisement