விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் கவின் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார்.

பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். அதன் பின் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது.
கவின் திரைப்பயணம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடைசியாக கவின் நடித்த “டாடா” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தனர். இதனை அடுத்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஸ்டார். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற 10-ம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது.
View this post on Instagram
கவின் பேட்டி:
இந்நிலையில் ஸ்டார் படத்தின் ப்ரோமோஷனில் தொகுப்பாளர், விஜய் மகன் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு கவின், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை அந்த மாதிரி என்னிடம் பேச வந்தது உண்மைதான். அப்போது நான் நடிக்கும் படங்கள் குறித்து எல்லாம் பேசினோம். பிறகு அவர்கள் கலந்து பேசி முடிவெடுத்து சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நான் என்னுடைய பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் அதைப்பற்றி யோசிக்கவில்லை.
விஜய் மகன் குறித்து சொன்னது:
அதோடு தளபதி விஜய் நாம் நினைத்ததை விட ரொம்ப எளிமையானவர். அதேபோல் தான் அவருடைய மகன் சஞ்ஜய் ரொம்ப ரொம்ப எளிமையானவர். இவர் இப்படி இருப்பாரா? என்று நான் யோசித்து கூட பார்க்கவில்லை. இவர்களே இப்படி இருக்கும்போது நாமெல்லாம் ஒன்னும் இல்லை என தோன்றியது என்று கூறியிருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து உள்ளார்.

சஞ்சய் குறித்த தகவல்:
பின் இவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். இவர் இறுதியாக ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார் . தற்போது சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






