ஸ்டார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கவின் அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
கவின் திரைப்பயணம்:
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
https://www.youtube.com/watch?v=tIzz4_JYVCg
டாடா படம்:
இதனைத் தொடர்ந்து கடைசியாக கவின் நடித்த படம் “டாடா”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தனர். இதனை அடுத்து கவின் அவர்கள் இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் தற்போது கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஸ்டார். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற 10-ம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது கவின்,
டாடா படத்துக்கு பிறகு தான் இயக்குனர் என்னிடம் ஸ்டார் கதை சொன்னார். இந்த கதை சொல்லும்போது ஸ்கிரிப்ட் புக் எதுவுமே இல்லாமல் தான் என்னிடம் வந்து கதை சொன்னார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த படத்தோட கதை சொன்னார். எனக்கு நடிப்பு மேல இருக்கிற நம்பிக்கை நடனத்தின் மேல் இருக்காது. இந்த படத்தின் முதலில் சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஓடாதுன்னு சொன்னாங்க. சில திரைப்படங்கள்தான் ஓடி இருக்கு. அந்த பேச்சுக்கள் இப்போ வரைக்கும் இருக்க தான் செய்கிறது. ஆனால் எங்கள் தயாரிப்பாளர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார்.
View this post on Instagram
கவின் கொடுத்த பதில்:
இந்த படத்தில் பெண் வேடம் அணிந்து பாடல் ஒன்றில் நடனமாடிருந்தேன். அது கலாட்டாவான ரோல். பின் செய்தியாளர் ஒருவர் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறீங்க? என்று ஒரு குற்றச்சாட்டு வந்ததே என்று கேட்டிருக்கிறார். அதுக்கு கவின், நம்ம கேட்கிறோம் என்று யாரும் அந்த சம்பளத்தை கொடுத்திட மாட்டாங்க. இப்போ நீங்க ஒரு ஆபீஸிலிருந்து அடுத்த ஆஃபீஸ்க்கு வேலைக்கு போகும்போது சம்பளம் அதிகமாக தான் போவீங்க. அது உங்களோட முந்தைய சம்பளத்தை பொருத்து தான் அதிகமாகும். மார்க்கெட் தான் சம்பளத்தை தீர்மானிக்கும். இந்த திரைப்படம் எனக்கு நான்காவது படம். இந்த திரைப்படம் முடிக்கவே எனக்கு ஒரு வருஷம் ஆகிவிட்டது. மத்தபடி வந்த தகவல்கள் எதுவுமே உண்மை கிடையாது என்று கூறியிருந்தார்.






