இவ்வளவு நடந்தும் இவங்க ரொமான்ஸ் குறையலயே.! நேத்து கவின்-லாஸ்லியா செய்ததை நோட் பண்ணீங்களா.!

0
11881
kavin-losliya
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்திருந்தது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார். இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் முன்னர் கவினை கட்டி அணைத்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உன் கேமை விளையாடுங்க என்று கூறினார் லாஸ்லியாவின் தந்தை.

அதே போல லாஸ்லியாவிடமும் இனி நீ ஆரம்பத்தில் எப்படி இறுதியோ அப்படி இரு என்று லாஸ்லியாவிற்கு அறிவுரை அளித்துவிட்டு சென்றார் லாஸ்லியாவின் தந்தை. இந்த நிலையில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு சென்ற பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் தனியாக அமர்ந்து பேசி கொள்வதை கொஞ்சம் குறைத்துக் கொண்டனர்.

-விளம்பரம்-

இதனால் இனி லாஸ்லியா மற்றும் கவின் இருவரின் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிட்டதாக கவிலியா ஆர்மி கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வந்தனர். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போதும் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் உள்ள ரொமான்ஸ் போகவில்லை என்று கவிலியா ஆர்மி கொஞ்சம் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement