முதன் முறையாக சந்தித்த கவின்-லாஸ்.. லீக்கான பிக் பாஸ் கொண்டாண்டத்தின் புகைப்படம்..

0
40940
Kavin-losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடியாக இருந்த வந்தார்கள் கவின் மற்றும் லாஸ்லியா தான். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதைதான் பல எபிசோடுகளில் ஓடியது. அதே போல இவர்கள் இருவரும் இருந்த வரை இவர்கள் இல்லாமல் ப்ரோமோவே ரொம்பவே இல்லை என்பது போல இவர் ரசிகர்கள் கூறி வந்தார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் இன்னும் இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கவில்லை என்பதுதான் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பிக்பாஸ் வீடு நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்கள் சந்தித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் வீ ஆர் தி பாய்ஸ் கேங்கில் இருந்த கவின் சாண்டி தர்ஷன் முகென் ஆகிய நால்வர் மட்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். ஆனால், இதே கேங்கில் இருந்த லாஸ்லியா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும், லாஸ்லியா, சாண்டி பாத்திமா பாபு அபிராமி சேரன் வனிதா என்று பலருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வெளியாகின. ஆனால், கவின் மற்றும் லாஸ்லியா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று கூட இதுவரை வெளியாகவில்லை. இதனால் இவர்கள் இருவரும் இதுவரை சந்திக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

இதையும் பாருங்க : டிடியை விவாகரத்து செய்ததர்காண காரணம் இது தான்.. முதல் முறையாக மனம் திறந்த டிடியின் முன்னாள் கணவர்..

- Advertisement -

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக லாஸ்லியா சாண்டி நடனப் பள்ளியில் நடனம் ஆடி இருந்த வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது அதேபோல கவினும், சாண்டியின் நடனப் பள்ளியில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக ரிகர்சலில் இருக்கும் வீடியோ வெளியாகி இருந்தது. ஆனால், எந்த வீடியோவிலும் கவின் மற்றும் லாஸ்லியா இருவரையும் ஒன்றாக காண முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான நடன ரிகர்சலில் போட்டியாரல்கள் பங்கு பெற்று இருக்கும் வீடியோக்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக வந்தன. சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற சொன்னா புரியாது பாடலுக்கு நடனமாடி இருக்கும் ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது.

இதன் மூலம் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கி விட்டது என்பது உறுதியானது. இந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் கவின் வேட்டி சட்டையிலும் லாஸ்லியா ஒரு மாடர்னான புடவையிலும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடனம் ஆடுவார்களா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement