மீண்டும் லாஸ்லியாவிற்கு வலை விரிக்கும் கவின்.! லாஸ்லியா விழுந்தாரா இல்லையா?

0
2565
Kavin-Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் போன்று கொடுக்கப்பட்டுள்ளது இந்த டெஸ்டில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா.

-விளம்பரம்-
Kavin-losliya

இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

- Advertisement -

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று டாஸ்கை எல்லாம் முடித்துவிட்டு லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கவின், இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்று கேட்டார் லாஸ்லியா.

அதற்கு பொடி வைத்து பேசிய கவின், நெனச்சத பண்ணவும் முடியால செய்யவும் முடியல, ஒரு வேலை அப்படி ஆகிடுச்சு என்றால் எல்லாம் சரியாகிவிடும் அது இல்லாம ஒரு மாதிரி போய்ட்டு இருக்கு. அதற்க்கு ஏற்றார் போல நீயும் ஒரு மாதரி பண்ற என்று கூறினார். ஆனால், இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் லாஸ்லியா ,மற்றும் கவின் பேசும் போது வேறு எத்தனையோ பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால், அதனை இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் பேசியதை வைத்து பார்க்கும் போது லாஸ்லியா கவின் மீது விரைவில் முழுமையாக காதலில் விழுந்துவிடுவார் என்று தான் தோன்றுகிறது. ஆனால், மற்றொரு புறம் இதுவும் லாஸலியாவின் ஒரு கேமோ என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் புற்று உடைந்து விடும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement