கவினை பற்றி தப்பாக பேசிய தொகுப்பாளர்.! மைக்கை தூக்கி எறிந்த சீரியல் நடிகர்.!

0
8233
Kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. அதே போல காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. முதல் சீசனில் ஓவியா ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா மஹத், ஐஸ்வர்யா ஷாரிக் இப்படி பலர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் கவின் தான் பிலே பாயாக இருந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் அபிராமி கவின் மீது காதலில் விழுந்தார். ஆனால் அதன் பின்னர் ஒரு காதல் கதை கொஞ்சம் நாளிலேயே முடிவுக்கு வந்து விட்டது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமிற்கு செல்லப்போகும் போட்டியாளர்.! இது என்ன புதிய ட்விஸ்ட்.! 

- Advertisement -

அதற்குப் பின்னர் சாக்க்ஷி மற்றும் கவின் இருவருக்கும் ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.ஆனால், கவினோ லாஸ்லாஸ்லியாவிடம் தான் ரொமான்ஸ் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இப்படி கவின் பெண்கள் அனைவரிடமும் நடந்து கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் டேமேஜ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் கவினின் நெருங்கிய நண்பரும் சீரியல் நடிகருமான ராஜூ  பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது தொகுப்பாளர் கவின் குறித்த சர்ச்சையான கேள்விகளை கேட்டு வந்தார் இதனால் கடுப்பான ராஜீ மற்றும் அவரது நண்பர் இருவரும் மைக்கை கழட்டிவிட்டு பேட்டியில் பாதியில் இருந்து வெளியேறினர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement