கவினுக்கு ரியோ கொடுத்த விருது..கடுப்பாகி ரியோவை திட்டி தீர்க்கும் கவின் ரசிகர்கள்..

0
32717
rio-kavin

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு குரூப் அமைந்துவிடும். அந்தவகையில் இந்த சீசனில் வீ ஆர் தி பாய்ஸ் என்ற குரூப் அமைந்திருந்தது. இந்த குரூப் ஆரம்பிக்க முதல் காரணமே மதுமிதா மற்றும் கவின், தாண்டி இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம். மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வீட்டின் ஆண்கள் பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூற இதனால் கவின் குரூப்புக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மதுமிதாவை வெறுப்பேற்ற வீ ஆர் தி பாய்ஸ் என்ற குரூப்பை துவங்கியதோடு வி ஆர் தே பாய்ஸ் என்ற பாடலைக் கூட சாண்டி குரூப் எழுதி பாடியது. இந்த பாடல் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்ததை ஓட்டி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மிஸ் செய்வதாகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வி ஆர் தி பாய்ஸ் குழு மீண்டும் ஒன்றாக சந்தித்தது. வி ஆர் தி பாய்ஸ் என்று ஒளிபரப்பபட்ட இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாண்டி, முகேன், தர்ஷன், கவின் ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் , இந்த சந்திப்பில் ரியோ மற்றும் மா க பா ஆனந்த்தும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நேற்று மாலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது, இதனால் வி ஆர் தி பாய்ஸ் குழுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். வி ஆர் த பாய்ஸ் குழுவில் சாண்டி கவின் தர்ஷன் முகென் கவின் மற்றும் லாஸ்லியா இருந்து வந்தார்கள். இவர்கள் அனைவருமே நிகழ்ச்சியின் இறுதிவரை இணைபிரியாமல் தான் இருந்து வந்தார்கள். ஆனால், இடையில் இவர்கள் குரூப்புக்கு ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் இவர்களது குரூப் பிரிந்தது என்று பலரும் கூறி வந்தனர். அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பின்னர் கூட இவர்கள் ஐவரும் இதுவரை ஒன்றாக சந்தித்ததும் இல்லை.

இருப்பினும் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் முடிவில், இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ரியோ போட்டியாளர்கள் அனைவருக்கும்ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் சில உருவ பொம்மைகளை பரிசாக அளித்திருந்தார். சாண்டிக்கு deadpool கதாபாத்திரத்தின் உருவ பொம்மையையும், முகெனுக்கு எனக்கு ரெயின்போ ராக்கி என்று thor பொம்மையைம் , தர்ஷனுக்கு கேப்டன் அமெரிக்கா உருவ பொம்மையும் அளித்தார் ரியோ. ஆனால் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான லோகின் உருவ பொம்மையை கவினுக்கு அளித்து தான் தற்போது கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நபர்களுக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் உருவ பொம்மைகளையும் அளித்த ரியோ கவினுக்கு மட்டும் வில்லன் கதாபாத்திரத்தின் உருவபொம்மையை அளித்திருந்தார். இருப்பினும் அதனை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார் கவின்.

-விளம்பரம்-

இந்த நிலையில் எதற்காக இந்த விருதினை அளித்தோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதில் சக்திவாய்ந்த மற்றும் வெற்றியாளர் என்பதால் முகேனுக்கு தோரும், தர்ஷன் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஒரு தலைவராக இருப்பதால் அவருக்கு கேப்டன் அமெரிக்கா பொம்மையும் கவின் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் மற்றும் கேம் சேஞ்சர் என்பதால் அவருக்கு லோகி பொம்மையும், அனைவரையும் சிரிக்க வைத்து மிகவும் கலகலப்பாக இருக்கும் சாண்டிக்கு டெட் பூள் பொம்மையும் கொடுத்ததாக ரியோ அறிவித்து இருந்தார.

ஆனால், இந்தப் பதிவிற்கு கீழே நாங்கள் ஊடக பொம்மை என்று இருப்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது ஒரு ஷோவை பண்ணிவிட்டு சம்பளம் வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு என்று முன்னெச்சரிக்கையாக ட்ரோல்களில் இருந்து தப்பிக்க ரியோ ராஜ், வடிவேலு அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இருப்பினும் இந்த பதிவினை கண்ட கவின் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். கவினுக்கு நீங்கள் தொலைக்காட்சி சொன்னதால் தான் இந்த விருதைக் கொடுத்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், நீங்கள் கவினிடம் நடந்து கொண்ட விதம் அவர்கள் மீது நீங்கள் எவ்வளவு வெறுப்பையும் பொறாமையையும் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. கவினுக்கு நீங்கள் தொலைக்காட்சி சொன்னதால் தான் இந்த விருதைக் கொடுத்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால், நீங்கள் கவின் நடந்து கொண்ட விதம் அவர்கள் மீது நீங்கள் எவ்வளவு வெறுப்பையும் பொறாமையையும் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement