கடந்த வாரம் கவின் மட்டும் இத்தனை கோடி வாக்குகள் வாங்கியுள்ளார்.! சேரனுக்கு எவ்வளவு தெரியுமா.!

0
7446
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
kavin

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு தான் அமோக ஆதரவு இருந்துவருகிறது. இதுவரை கவின் பலமுறை நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் வந்தபோதெல்லாம் அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்துவந்தார். கடந்த வாரம் கூட கவின் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். பல்வேறு இணையதளங்களில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவில் கூட கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்துவந்தன.

- Advertisement -

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் கூட கவின் தான் கமலால் முதலில் காப்பாற்றபட்டிருந்தார். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற ஒட்டிங்கில் கவினுக்கு மட்டும் 8.8 கோடி வாக்குகள் (கிட்ட தட்ட 9 கோடி வாக்குகள்)விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு அடுத்தபடியாக தர்ஷனுக்கு 8.6 கோடி வாக்குகள் விழுந்துள்ளது.

Image

மேலும், சாண்டிக்கு 7.9 கோடி வாக்குகள் விழுந்துள்ளது. ஷெரீனுக்கு 6 கோடி வாக்குகள் பெற்ற நிலையில், வனிதா 5 கோடிக்கும் குறைவான வாக்குகள் பெற்று நேற்று வெளியேற்ற பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் அதிக வாக்குகள் பெற்ற கவின் இந்த வாரமும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். எனவே, இந்த வாரம் அவருக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் எப்படி கவினுக்கு இவ்வளவு ஆதரவு என்பது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement