2019 -ன் விரும்பத்தக்க நபர்கள். சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளி டாப் 4ல் இடம் பிடித்த 3 பிக் பாஸ் பிரபலங்கள்

0
12877
bigg-boss
- Advertisement -

வெள்ளித்திரையில் ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியலை ஆண்டு இறுதியில் கணக்கு கணிப்பு நடத்தி வெளியிடுவார்கள். இது வழக்கமான ஒன்று. அதே சமயம் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகின்றனர். அதற்கு காரணம் படங்களுக்கு இணையாக சீரியலில் காதல், சண்டை, வில்லத்தனம், சென்டிமென்ட், ரொமான்ஸ் என தூள் கிளப்பி பயங்கர ட்ரெண்டிங்காக மாறி உள்ளது.

-விளம்பரம்-

அதோடு புதுப்புது வித்தியாசத்தை சின்னத்திரை சீரியல்களில் கொண்டு வருகின்றார்கள். இதனால் சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் சமீப காலமாக சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சீரியல்களை ரசிக்க தொடங்கி விட்டார்கள். அதே போல் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு முடிவில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நட்சத்திரங்கள் யார் என்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.

இதையும் பாருங்க : ஷாலு ஷம்முவை போல பஜாட்டா நடனம். வீடியோ பகிர்ந்து ஷாக் கொடுத்த ஸ்ரீதிவ்யாவின் சகோதரி.

- Advertisement -

சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு பிரபலமானவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அதில் ரசிகர்களின் அன்பை பெற்றவர்களும், தினமும் டிவியில் பார்த்து மகிழும் பரிச்சயமான முகங்களும் என்ற பட்டியலில் பல நடிகர்கள் இடம் பெற்று உள்ளனர். நேற்று நடிகைக்கான பட்டியல் வெளி வந்தது. இன்று நடிகர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த நடிகர்கள் எந்த எந்த இடத்தை பிடித்து உள்ளார் என்று பார்க்கலாம்.

1வது இடம்– சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையன் கவின்.

-விளம்பரம்-

2வது இடம்– பிக் பாஸ் முகென் ராவ் .

3வது இடம்– ஆர்.ஜெ. விஜய்.

4வது இடம்– பிக் பாஸ் தர்சன்.

5வது இடம்– கதிரவன் .

6வது இடம்– சின்னத்தம்பி ப்ரஜின்

7வது இடம்– ராகுல் ரவி.

8வது இடம்– ராகேஷ்.

9வது இடம்– பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் குமரன்.

10வது இடம்– பேரழகி சீரியல் விராட்..

11வது இடம்– செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜ்.

12வது இடம்– புவியரசு முத்துசாமி.

13வது இடம்– நடிகர் ரியோ ராஜ்.

14 வது இடம்– திருமணம் சீரியல் நாயகன் சித்து .

15வது இடம்– ஈரமான ரோஜாவே புகழ் ஷியாம்.

16 வது இடம்– ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூரியன்.

17 வது இடம்– இரட்டை ரோஜா சீரியல் ஹீரோ அக்ஷய் கமல்.

18 ஆவது இடம்– பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத்.

19 ஆவது இடம்– விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன்.

20 ஆவது இடம்– ராஜா ராணி, காற்றின் மொழி சீரியல் புகழ் சஞ்சீவ் கார்த்திக்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குஷியில் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளன.

Advertisement