பிக் பாஸின் உண்மையான Trp கிங் கவின் தான்.! இத படிங்க புரியும்.!

0
10923
kavin
- Advertisement -

கவின் அவருடைய வெளிநடுப்பும், அவரது பிக்பாஸ் வீட்டு ரீ என்ட்ரியும் என இவ்விரண்டு நிகழ்வுகளுமே தான் பிக்பாஸ் தமிழ் சீசன்3 2019ன் மிக அதிக TRP உயர உச்சத்தை அடைந்த அத்தியாயங்கள் . க்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியை அதன் தொடக்க நாள் முதல் இதோ இன்றைய இரவு எபிசோடுக்கான ப்ரொமோ முன்னோட்டம் வரையிலும் கண்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் அத்தனை ரசிகர்களும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டேயாக வேண்டிய உண்மை இது தான்.

-விளம்பரம்-
Image result for bigg boss kavin ;losliya

- Advertisement -

இந்த சீசனுக்கான TRP மொத்தமும் கவின் சாம்ராஜ்யம் தான்.

உங்களுக்கு கவினை பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால், கவின் தான் இந்த சீசனது ஏகோபித்த ரசிகர்களை தன்வசப்படுத்திய மக்கள் செல்வன் மட்டுமல்ல. கவின் தான் இந்த சீசனுக்கான கன்டன்ட் கிங். வாரா வாரம் எத்தனையோ எவிக்சன்கள் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. எந்த எவிக்சனுக்கும் இத்தனை பரபரப்போ, பதற்றமோ, பரிதவிப்போ மக்கள் மத்தியில் தொற்றியதுமில்லை… அந்த எபிசோடுக்கான TRP எகிறியதுமில்லை…!!!

-விளம்பரம்-

அந்தந்த எவிக்சன்கள் ஒவ்வொன்றுமே… ஏதோ அது மற்றுமொரு நிகழ்வெனவே கடந்து போனதென்பது தான் உண்மை..!!!

எந்த பரபரப்புமின்றி நிகழும் எவிக்சன் சனி ஞாயிறு எபிசோடுகளில் அப்போதுமே கூட கவினின் எவிக்சன் வெற்றி தான் அந்த எபிசோடுக்கான TRPயை நிர்ணயிக்கும் காரணியாகத் திகழ்ந்தது..!

கவின் எவிக்சனிலிருந்து நிச்சயமாக வெல்வான் தான் என தெரிந்தே இருந்தும்… அந்த சந்தோஷ தருணத்தை தரிசிப்பதற்கென்றே ஞாயிறு இரவு எபிசோடுக்காக கவின் ரசிகர்கள் நாங்கள் தவம் கிடப்போம்..!

Image result for bigg boss kavin sakshi

இதுவரையிலான எந்த எவிக்சன் வெற்றிக்கும் கவினிடம் இருந்து எந்த பெரிய அளவிலான ஆராவாரமோ.. அமர்க்களமோ.. மிதப்போ..மமதையோ.. கர்வமோ என இதுவெதுவுமே தென்படாது…!!!!!! அதை ஒரு இன்ப அதிர்ச்சியாக ஏற்று.. வார்த்தை சொல்லற்று அமைதியே உருவாக அமர்ந்திருப்பதே தான் கவின் அவரது எப்போதுமான உடல்மொழி உணர்வெழுச்சி…!!!

ஒவ்வொரு நாமினேஷனின் போதும்… நாமினேட் ஆனவர்கள் அதற்காக வருந்துவதும்.. அதிலிருந்து தப்பித்து மீண்டு விட மாட்டோமா எனும் ஒருவித பதற்றத்திலேயே அந்த வார்த்தை கடந்து கொண்டிருப்பதுமென… இந்த சராசரி மனித இயல்பிலிருந்து சற்று விலகி.. கவின் முற்றிலுமாக வேறொரு அணுகுமுறையை நமக்கு அறிமுகப்படுத்தினார்..!!!

நான் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறேன்..!! இது தான் இந்த வீட்டில் எனக்கு கடைசி வாரம்.. இந்த ஏழு நாட்களை என்னால் முடிந்த வரை சந்தோஷமும் மகிழ்ச்சியுமாக வாழ்ந்து… வாழ்த்தி விட்டு சனிக்கிழமை இரவன்று விடைபெற்று வெளியேறுவேன் என்ற முடிவோடு..

Image result for bigg boss kavin sakshi

எவிக்சன் பற்றிய எக்கவலையுமின்றி நட்பு காதல் அன்பு.. ஆடல்.. பாடல்.. கொண்டாட்டம்… குதூகலம்… கண்ணீர்… வலி… வேதனை… மன உளைச்சல்… மன்னிப்பென அத்தனை உணர்வுகளையும் உள்ளது உள்ளபடி… எச்சமரசமுமின்றி வெளிப்படுத்தி ஒரு வாரம் முழுவதும் முழுமையான.. முழு திருப்தியான.. தன்னிகரற்ற இருப்பொன்றை நிகழ்த்தி விட்டு.. எவிக்சன் பரீசலனைக்கு வந்தமரும் நொடி வரையிலுமே சிரித்த முகத்தோடு புன்னகை தவழ காட்சி தரும் கவினை ஆச்சரியம் விலகாமல் பார்த்ததிருக்கறேன்..!!

ஒவ்வொரு முறையும் தான் எவிக்ட்டாகி தன் நண்பர்கள் காப்பாற்றப்படுவார்கள் என வெளியேறத் தயாராக இருக்கும் கவினைத் தான் மக்கள் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்திருப்பார்கள்…!

உண்மையில் இந்த அதிர்ச்சி தாளாமல் தான் கவின் பிரமித்து வார்த்தையற்று.. வாயடைத்துப் போய் அமைதியாக இருப்பாரேயன்றி அது நாடகமோ நடிப்போ அல்ல..!!!

இந்த சீசன் எபிசோட் ஒவ்வொன்றையும் நீங்கள் நுட்பமாக கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்..!! கவின் எப்போதும் எங்கும் தனக்காக சண்டையிட்டதோ… நியாயம் கேட்டதோ.. குரல் உயர்த்தியதோ இல்லை..!!! அதுவத்தனையுமே அவர் தன் நண்பர்களுக்காக மட்டுமே தான் முன் நின்று நிகழ்த்தியிருப்பார்.

இதனால் தான் நேற்றைய எபிசோடில் கூட சாண்டி… கவினை பற்றி நினைவு கூறும் போது.

“அந்த போட்டியிலேயே அவன் இல்லைன்னா கூட… விளையாடிட்ருக்க சக போட்டியாளர்களுக்கு தேவையான எல்லா உதவியும் செஞ்சுட்டே இருப்பான்… நாங்க அந்த டாஸ்க்ல ஜெயிக்க உறுதுணையா இருப்பான்..!!! அவன் என் கூடப் பிறந்தவன் அவன என் நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன்..!!” என பேசி முடிக்க…

அதை ஆமாம் என்பதாக அத்தனை பேரும் தங்களையும் அறியாமல் கைதட்டத் தொடங்கினார்கள்.

கவின் அவன் தன் இயல்பாக செய்யும் அத்தனை செயல்களையும் நடிப்பு.. நாடகம்.. டைட்டில் ஜெயிப்பதற்கான யுக்தி.. ஸ்ட்ராட்டஜி.. சதித்திட்டம்… சகுனி வேலை என சேரன் முதல் கமலான் வரை குறை சொல்லிக் கொண்டிருந்ததில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை.

அவர்கள் யாவரும் கவினை அவர்களது கண்ணோட்டம்.. கற்பிதம்.. புரிதலின்படியே தான் எடைபோட்டுச் சலம்பிக் கொண்டிருந்தார்களே தவிர.. அவர்களை விடவும் உயர்ந்த பண்புகளையும்.. வாழ்வியல் விழுமியங்களையும் கவின் தன்னகத்தே கொண்டிருந்தான் என்பதை அவர்களால் ஒருபோதும் உணரவே முடியாமல் போனது.

அத்தனை பெரிய ஆளுமையாம் சேரனையே வெளியேற்றி.. மக்கள் கவின் இவனை அந்த வீட்டில் இருக்கச் செய்த அந்த சனிக்கிழமை இரவு.. அது தான் சேரனுக்கும்.. கமலானுக்கும் ஒரு சேரக் கிடைத்த.. இல்லையில்லை மக்கள் கொடுத்த மரண அடி.

இதை உணர்ந்தே தான்… “மக்களுக்கு என்னை விட உன்னத் தான் பிடிச்சிருக்கு டா கவின்…” என சேரன் ஒப்புதல் வாக்குமூலம் ஒப்பிக்க…. அவர் அருகே கமலானும் அதை ஒரு மிரட்சியான மவுனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த சனிக்கிழமை இரவே கிட்டத்தட்ட ஒரு மினி ஃபினாளே இரவு போல தான் காட்சி தந்தது…!!! டைட்டில் கவினுக்கு… ரன்னரப் தர்ஷனுக்கு.. என பேசத் தொடங்கியது உலகம்.

Image result for bigg boss kavin ;losliya

இத்தனை மாபெரும் ஆதரவை ஆன்லைவ் அனுபவித்தவன் எவனாக இருந்தாலும்…. அட அது கமலாகவே இருந்தாலும்…. டைட்டில் நமக்கு தான் போலயே… சரி.. ஃபைனல் நிச்சயம்…. டைட்டில் லட்சியம் டா என அந்த பிக்பாஸ் வீட்டில் மிச்சமிருந்த நாட்களுக்கும் பட்டறை போட்டு அமர்ந்திருப்பான் தானே.

ஆனால் கவின் உங்களுக்கும் எனக்குமென நமக்கெல்லாம் பல ஆச்சரியத் திருப்பங்களைத் தர காத்திருந்தான்.

அத்தனை பெரிய ஜனத்திரள் மக்கள் ஆதரவையும் ஒரு புறம் வைத்து.. நான் கொண்டிருந்த நட்பே இங்கு சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகு இந்த போட்டியோ இதில் கிடைக்கும் மிச்ச நாட்களுக்கான சம்பளமோ.. ஒருவேளை டைட்டில் வென்றால் கிடைக்கக் கூடும் ஐம்பது லட்சம் பரிசுத்தொகையோ என எதுவுமே வேண்டாமென தன் நட்பை நிரூபித்து..

நண்பர்கள் அவர்கள் ஜெயிக்க வழிவிட்டு வெளியேறிய கவினை அந்த வாரத்தின் சனிக்கிழமை எபிசோடில் கமலான் அதுவரை வேறெந்த சீசன் போட்டியாளரிடமும் காண்பித்தேயிராத பவ்வியப் பிரியப் பணிவோடு வரவேற்று.. கவினை பேசவிட்டு கமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

கவின் வெளியேறிய அந்த இரவும்… அவர் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இரவும்… அவர் பிக்பாஸ் வீட்டுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் இதோ இன்றைய இரவும் தான் விஜய் டிவியின் இந்த சீசனுக்கான உட்சபட்ச TRP உடைய எபிசோட்களாக திகழ்கிறது

நான் பெர்சனலாகவே கவின் சார்ந்த மூன்று இரவுப் பொழுதுகளை கடந்து வந்திருக்கிறேன்..!! அய்ய்ய்யோ கவின் வெளியேறியிருக்கவே கூடாது அவன் தொடர்ந்து விளையாடனும்…. அவன் அந்த வீட்டில் இருந்தேயாக வேண்டும் என இரவெல்லாம் கண்விழித்து பரிதவித்த இரவு!! கவின் எங்க தான்டா போனான்???? என்ற கேள்விக்கு பதிலாக கவின் பிக்பாஸ் மேடையில் தோன்றிய அந்த சனிக்கிழமை இரவு…!! நாளையோட பிக்பாஸே முடியப் போகுது…. யார் யாரோ வராங்க… நாளிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமாவது கவின் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துடனும்டா கடவுளே என்ற பிரார்த்தனை வேண்டுதல் சுமந்த நேற்றைய இரவு…!!!!

இம்மூன்று இரவுகளுமே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களுமே கவின் முகம் காணக் காத்துக் கிடந்த இரவுகள் என்றால் அது மிகையாகாது..!!

ஆமாம்…

எனக்கு தெரிந்தே கவின் ஹேட்டர்ஸ் பலரும் இப்போது கவின் பிரியர்களாக மாறியிருக்கிறார்கள்…!! அட நானுமே இந்த சீசன் தொடக்கத்தில் கவின் ஹேட்டர் தான் நண்பர்களே என்னளவில் சொல்கிறேன்.. தன்னைப் பிடிக்காத.. தன் எதிர்ப்பாளர்கள்.. எதிரிகளையே தன்வசப்படுத்தி தன்னை ரசிக்கும்படியான நிலைக்கு கொண்டு செல்வதெல்லாம் ஆகப்பெரும் ஆச்சரியம் தான்..!! அதை அத்தனை சுலபமாக நம் கண் முன்னே சாத்தியப்படுத்தியிருக்கிறார் கவின்

பிக்பாஸ் டைட்டில் யாருக்கு வேண்டுமானாலும் சென்று சேரட்டும்..!!!! மக்கள் மகுடம் அது இனி எப்போதும் கவின் ஒருவனுக்கு மட்டுமே தான்..!

நன்றி – அஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement