நேத்து கவின் அந்த வார்த்தையை சொன்னாரா இல்லையா.! இதோ ஒரு குறும்படம்.!

0
14911
kavin

இந்த வார எபிசோடில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது பல போட்டியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டை மீறி காச் மூச்சுனு சண்டையிட்டனர். நேற்றுடன் இந்த டாஸ்கே முடிந்த நிலையில், இந்த டாஸ்கில் சிறந்து விளையாடியது யார், சுவாரசியமாக செய்யாதது யார் என்று பிக் பாஸ் கேட்டார்.

இதில் இந்த வார டாஸ்கை சிறப்பாக செய்த்தில் மீரா, தர்ஷன், முகென் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், இந்த வார டாஸ்கை யார் சுவாரசியம் இல்லாமல் செய்த்து என்று கேட்ட போது லாஸ்லியா தாமாக முன்வந்து தனது பெயரை சொன்னார்.

இதையும் பாருங்க : பொறுமையை இழந்து வாடி போடி என்று திட்டிய கவின்.! கண்ணீர் விட்ட சாக்க்ஷி.! 

- Advertisement -

இதனால் கொஞ்சம் அப்சட் ஆன கவின், இந்த டாஸ்கை ஸ்வாரசியம் குறைவாக செய்த்து ஷெரின் மற்றும் சாக்க்ஷி தான் என்றார். அவர்களுக்கு தமிழ் தெரியாததால் அவர்களால் வட்டார மொழியை சரியாக பேச முடியவில்லை என்றார். அதற்க்கு ஷெரின் மற்றும் சாக்க்ஷி இருவரும் எங்களுக்கு தமிழ் பேசுவதே கடினம் அப்படி இருந்தும் நாங்கள் முயற்சி செய்தோம் என்றார்.

கவின் அப்படி சொன்னது சாக்க்ஷியை மிகவும் பாதித்தது இதனால் கவினிடம் ‘நான் என்ன சுவாரசியம் இல்லாமல் செய்தேன் சொல்லு’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார் சாக்க்ஷி. அதற்கு கவினோ, நான் சுவாரசியம் இல்லை என்ற வார்த்தையை சொல்லவே இல்லை என்று பொய் சொன்னார். ஆனால், உண்மையில் அவர் ‘சுவாரசியம்’ என்ற வார்த்தையை சொன்னாரா இல்லையா என்பதற்கு ஒரு குறும்படம் இதோ.

-விளம்பரம்-
Advertisement