நீ மட்டும் தான் உனக்கு துணை. செல்வராகவன் போட்ட டீவீட்டுக்கு கவினின் ரியாக்ஷன்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். இயக்குனர் செல்வராகவன் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் அண்ணன் என்பது தெரியும். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்,என்.ஜி.கே. என பல படங்களை இயக்கி உள்ளார். அதிலும் இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிங்கர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
https://twitter.com/selvaraghavan/status/1208278803237130241
இயக்குனர் செல்வராகவன் படைப்புகள் எல்லாமே மக்கள் மத்தியில் பதிய வைக்கும் படங்கள் ஆகும். அந்த வகையில் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து இயக்கிய படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் படம் இயக்குவது மட்டுமில்லாமல் பல பாடல்களையும் கூட எழுதி உள்ளார். மேலும், இவர் சமீபத்தில் ஒரு ட்விட்டர் ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, "இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும். நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும். விடையை நீ உனக்குள் தான் தேட வேண்டும்" என்ற வரியை போட்டு உள்ளார். இதற்கு பத்தாயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.
இதையும் பாருங்க : சிம்பிளாக சென்று தேசிய விருதை பெற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷ். வைரலாகும் வீடியோ.
மேலும், இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவு செய்தது உள்ளார். அதை கவின் அவர்கள் ஷேர் செய்தும், லைக் செய்தும் #லைப் என்று பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் கவின்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" என்ற தொடரில் வேட்டையின் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனைத் தொடர்ந்து "நட்புனா என்னனு தெரியுமா" என்ற படத்தில் கதாநாயகன் நடித்து உள்ளார். தற்போது கவின் அவர்கள் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது.
https://twitter.com/Kavin_m_0431/status/1208356690560598017
தமிழ் சினிமாவில் செல்வராகவன் மாதிரி சிறந்த இயக்குனர் பார்க்க முடியாது. அவர் இயக்கிய இரண்டாம் உலகம், என் ஜி கே படம் எல்லாம் மிகப் பெரிய அளவு வெற்றியை கொடுத்தது. மேலும், இயக்குனர் செல்வராகவன் அவர்கள் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற படத்தை எடுத்து உள்ளார். இந்த படம் குறித்து நான் பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன் என்று கூறி உள்ளார். இப்படி ஒரு நிலையில் செல்வராகவன் செய்த டீவீட்டிற்கு கவின் ஏன் ரிப்லை கொடுத்துள்ளார் ஒருவேளை நடிகர் கவின் அவர்கள் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் படத்தில் நடிக்க கொக்கி போகிறாரா என்றும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.