சிம்பிளாக சென்று தேசிய விருதை பெற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷ். வைரலாகும் வீடியோ.

0
3113
keerthi-suresh

தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப் படங்களில் நடித்து வருகிறார். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர். ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தற்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

சமீப காலமாக சினிமா உலகில் மறைந்த பிரபலமான நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். அந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது.

இதையும் பாருங்க : புகைபிடிக்காதீர்கள் என்று புகைபிடிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட விஷ்ணு விஷால். அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.

- Advertisement -

இந்தியாவில் உருவாகும் சிறந்த திரைப் படங்களுக்கு எல்லாம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் என்பது கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் கொடுக்கப்படுவது. இந்த விருதுகளுக்காக தான் பல பேர் உழைத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் விருது வாங்க வேண்டும் என்றும் ஒரு கனவோடு இருப்பார்கள். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் வெளியாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கும் பட்டியல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 66 ஆவது தேசிய விருது ஆகும்.

இதில் மொத்தம் 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கி உள்ளார். அதில் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) தெலுங்கு திரைப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வாங்கும் போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அழகாக, இந்தியாவின் கலாச்சாரத்தின் பெருமையாக, லட்சணமாக புடவை அணிந்து சென்றிருந்தார். அப்போது அவர் புடவை அணிந்து கொண்டு தேசிய விருது வாங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image

இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷ்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். மகாநதி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 168” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்து உள்ள “பென்குயின்” என்ற படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதோடு கீர்த்தி சுரேஷ் அவர்கள் பாலிவூட் பக்கம் கால் பாதிக்க போகிறார் என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement