நியாயமாக பார்த்தால் கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும்.! கடுப்பான தயாரிப்பாளர்.!

0
6230
kavin
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார். இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் முன்னர் கவினை கட்டி அணைத்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உன் கேமை விளையாடுங்க என்று கூறினார் லாஸ்லியாவின் தந்தை.

- Advertisement -

அதே போல லாஸ்லியாவிடமும் இனி நீ ஆரம்பத்தில் எப்படி இறுதியோ அப்படி இரு என்று லாஸ்லியாவிற்கு அறிவுரை அளித்துவிட்டு சென்றார் லாஸ்லியாவின் தந்தை. இது ஒரு புறம் இருக்க freeze டாஸ்கில் கவினை சந்திக்க அவரது நண்பரும் அருவி பட நடிகருமான பீட்டர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

-விளம்பரம்-

இன்று வெளியான முதல் ப்ரோமவில், கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமான நீ செய்த விஷயத்திற்கும், மற்றவர்களை நோகடித்தற்கும் உன்னை அறைய வேண்டும் என்று கவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இந்த ப்ரோமோ ரசிங்கர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவரிடம் இன்றைய ப்ரோமோ குறித்து கேட்கப்பட்டபோது, கவின் லொஸ்லியா அப்பா, அம்மா வந்த போது “நான் இதெல்லாம் நினைத்து பார்க்கவில்லை என்று சொல்கிறார் கவின், அப்போ அவர் என்ன, மாமா வாங்க, மருமகனே எப்படியிருக்கீங்க என்று கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்தாரா?, நியாயமாக பார்த்தால் கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement