கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது.! மனம் வருந்தும் கவின்.! லீக்கான வீடியோ.!

0
26662
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த போட்டியாளர் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும், இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் நபர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர் கவின் அதற்கு சம்மதித்து எழுந்துநின்றார்.

கவின் எழுந்து நின்றதும் சாண்டி மற்றும் லாஸ்லியா இருவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் கையில் பணப்பெட்டியுடன் கவின் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த புகைப்படம் உண்மையான புகைப்படமா என்பது தெரியவில்லை. இருப்பினும் கவின் வெளியேறியது உண்மை தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இணையத்தில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டியிடன், தான் ஏன் வெளியேற விரும்புகிறேன் என்பதர்க்கான காரணத்தை கூறியுள்ளார் கவின்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement