இன்றைய குறும்படம் இதான்.! வெச்சி செய்த கமல்.! இன்றய நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்.!

By Rajkumar · 27/7/2019

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பல்வேறு சண்டைகளும் சர்ச்சைகளும் நடந்தேறியது. சாண்டி மற்றும் மதுமிதாவின் ஒரு புறம் இருந்தாலும் அதையே தூக்கி சாப்பிடும் விதமாக மீரா, சேரன் தன்னிடம் அத்து மீறி நடந்ததாக போட்ட நாடகம் தான் அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியது.

மீரா, தன் மீது இப்படி ஒரு பழியை போட்டதனால் சேரன் மிகவும் அவமானமாக உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். மேலும், தான் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் கூறினார் சேரன். பின்னர் மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானபடுத்தினர். இருப்பினும் நான் தவறு செய்தேனா இல்லையா என்று கமல் சாரிடம் வாதாடுவேன் என்று கூறியிருந்தார் சேரன்.

இதையும் பாருங்க : ஷெரின் மீது அடுக்கடுக்காக பொய்களை சொன்ன மீரா.! கடுப்பான ஷெரின்.! டெலீட் செய்யப்பட்ட காட்சிகள்.! 

மேலும், உண்மையில் சேரன், மீராவிடம் கடுமையாகவோ அல்லது தவறாகவோ நடந்து கொண்டாரா என்று மீரா குறிப்பிட்ட அந்த ஒரு காட்சி மற்றும் இணையத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சேரன் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்பது தெளிவாக புலப்பட்டது.

https://twitter.com/NetFreak143/status/1154442877956550656

எனவே, கமல் கண்டிப்பாக இந்த வாரம் மீரா மற்றும் சேரன் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த பிரச்னையால் மீராவிற்கு குறும்படம் ஒன்றை போட்டுக் காண்பித்துள்ளார் கமல். அதே போல மீராவை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார் கமல். மேலும், இந்த விஷயத்தில் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் சேரனை தான் ஆதரித்துள்ளனர்.

இதையும் பாருங்க : உண்மையில் தவறாக நடந்தாரா சேரன்.! விடியோவை பார்த்துட்டு நீங்களே முடிவை சொல்லுங்க.! 

மேலும், இந்த வார எலிமினேஷனில் இருந்து சேரன் காப்பாற்றபட்டார் என்றும் அறிவித்துள்ளார் அதே போல மதுமிதா மற்றும் சாண்டி பஞ்சாயத்தையும் தீர்த்து வைத்துள்ளார் ஆனால், இருவரையும் கமல் அந்த அளவிற்க்கு கண்டிக்கவில்லை. மாறாக மதுமிதாவை போன்று நடித்துக் காண்பித்துள்ளார். மேலும், சாண்டிக்கு கொஞ்சம் அட்வைசும் செய்துள்ளார். இவை அனைத்தும் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full