உண்மையில் தவறாக நடந்தாரா சேரன்.! விடியோவை பார்த்துட்டு நீங்களே முடிவை சொல்லுங்க.!

0
119187
Meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றய எபிசோடில் மீரா மற்றும் சேரன் இடையே நடந்த பிரச்சனை தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண் என்றும் பாராமல் சேரன் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டது எனக்கு வலியை ஏற்படுத்தியது என்று மீரா கூறியதால் சேரன் அவமானத்தில் தலை குனிந்து கண்ணீர் வடித்தார்.

-விளம்பரம்-

மீரா, சேரன் தன்னை முரட்டுத்தனமாக தூக்கி வீசினார் என்று சொன்ன அந்த விடியோவை மீண்டும் மீண்டும் பார்த்ததில் சேரன், மீராவை எந்த வித நோக்கத்துடனும் தொட்டது போல தெரியவில்லை. மேலும், அவர் கை வைத்து தள்ளியது அந்த அளவிற்க்கு முரட்டுத்தனமாக இருந்தது போன்றும் தெரியவில்லை.

இதையும் பாருங்க : என்ன 5 வராம நாமினேட் பண்ணீங்க.! மீண்டும் பிரச்னையை கிளப்பிய மீரா.!

- Advertisement -

உண்மையில் சேரன் மீராவை தள்ளிய போது மீரா சிரித்துக்கொண்டு தான் இருக்கிறார். மேலும், தன்னை தள்ளியது தனது நண்பர்களில் யாராவது இருப்பார்களோ என்று எண்ணி முதலில் மீரா செல்லமாக அடிக்கப்பார்கிறார். அதன் பின்னர் அது சேரன் என்று தெரிந்ததும் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

எனவே, இதனை பிரச்னையாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த பிரச்னையை அனைவர் முன்பும் கொண்டுவந்தார் மீரா. அவர் இந்த பிரச்சனையை ஆரம்பிக்கும் போது, நான் முதன் முதலில் இந்த வீட்டிற்க்குள் வந்த போது அவரை கட்டிப்பிடிக்க சென்றேன். ஆனால், அவரோ நான் பெண்களை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

ஆனால், அதன் பின்னர் அவர் பெண்களிடம் எப்படி பேசினார் என்பது தெரியும் என்று தான் ஆரம்பித்தார். இதிலிருந்தே அவர் சேரன் பெயரை கெடுக்கவே இந்த விஷயத்தை ஆரம்பித்தார் என்று தெளிவாக தெரிந்தது. இந்த விஷயத்தில் சேரன் மன்னிப்பு கேட்டும் மீரா மீண்டும் மீண்டும் சேரன் செய்ததை சுட்டிக்கொண்டே இருந்தார்.

உண்மையில் சேரன் செய்தது தவறா இல்லை மீரா கூறுவது உண்மையா என்பதை இந்த விடியோவை பார்த்து நீங்களே கமெண்டை கூறுங்கள். எங்களை பொறுத்தவரை சேரன் திட்டம் போட்டு இதை செய்தது போலவோ இல்லை முருட்டுத்தனமாக தள்ளியது போலவே தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement