பிக் பாஸ் இருந்தும் TRP யில் அதல பாதாளம் சென்ற விஜய் டிவி.! முதல் இடத்தில் எந்த டிவி தெரியுமா.!

0
6960
Bigg-Boss
- Advertisement -

இந்தியாவில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சேனல்களில் டிஆர்பி என்ற பெயரில் மறைமுக போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை கோல்டு வார் என்று கூட சொல்லலாம். டிஆர்பி என்பது சினிமா துறையில் மட்டுமல்ல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், அரசியல், பள்ளிகளிலும் கூட நடக்கிறது. டி ஆர் பி தான் மனிதன் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை மாற்றி அமைக்கிறது. இந்த டிஆர்பி தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் கூட மாறிக்கொண்டே இருக்கும்.டி ஆர் பி மட்டும் தான் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணம்.

-விளம்பரம்-

தற்போது இருக்கும் நவீன உலகத்திற்கு டிஆர்பி தான் ஆணிவேராக உள்ளது. முன்னல்லாம் எப்பயாவது ஒரே ஒரு முறைதான் டிஆர்பி பற்றி பேசுவார்கள். ஆனால், இப்போ எல்லா விஷயத்திற்கும் டிஆர்பியை தான் பேசுகிறார்கள்.ரேட்டிங்கில் முதலிடம் வருவது என்பது மட்டும்தான் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் இலக்கு.ஒவ்வொரு சேனலின் நிறுவனமும் தங்களின் சேனல்களை மக்கள் அதிகமாக விரும்ப வேண்டும் என்று வித்தியாசமான நிகழ்ச்சிகள், போட்டிகள், விறுவிறுப்பாக தொடர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் ஒரு சீரியல் எடுத்துக் கொண்டால் ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் தொடரில் ஒருவர் கொலை செய்யப்பட்ட மாதிரி சீன் வந்தால் அதை தொடர்ந்து பல சேனல்களில் ஒளிபரப்பு செய்து வெளியிடுகிறார்கள். ஒரு சீரியலில் திருவிழா கொண்டாட ஆரம்பித்தால் போதும், விறுவிறுப்பாக போகிறது என்று அதையே மற்ற சீரியலில் வைத்து எடுக்கிறார்கள். இதே மாதிரி எடுத்துக்காட்டாக சன் டிவியில் நாகினி சீரியல் வந்தவுடன் உடனே ஜீ தமிழ் டிவியில் நாகராணி தற்போது விஜய் டிவியில் தாழம்பூ என்ற பாம்பு கதை வைத்து எடுக்கிறார்கள்.

Image result for sun tv

இதனால் சேனல்களில் திடீர் திடீர் டிஆர்பி ரேட்டிங் மாறி கொண்டே இருக்கும். இதை ஒரு விதமான மறைமுக போர் என்று சொல்லலாம் .இதனாலே ஒவ்வொரு சேனல் நிறுவனம் தங்கள் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான புதிய புதிய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்து அசத்துகிறார்கள். தற்போது டிஆர்பி ரேட்டிங் கணக்கெடுத்து பார்க்கையில் சன்டிவி தான் முதலிடத்தில் உள்ளது என்றும், விஜய் டிவி இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் தெரியவந்தது. இதனால் பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

விஜய் டிவில தானே பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்ப மக்கள் அதிகமாக பிக் பாஸா தானே பாத்துட்டு இருப்பாங்க . டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவிதான் முன்னாடி இருக்கணும் என்று கேள்விகள் வந்தன. தற்போது, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் ரொம்ப பின்னாடி இருக்கிறது என்று கூட சொல்லலாம். இதற்காக விஜய் டிவி அடுத்து என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை .ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாழம்பூ என்ற பாம்பு சீரியலின் மூலம் டிஆர்பியில் முன்னாடி வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் மூன்றாம் இடத்திலும், கேடிவி நான்காம் இடத்திலும், ஸ்டார் விஜய் சூப்பர் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement