பிக் பாஸ் வீட்டில் தற்போது லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.
லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார். இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் முன்னர் கவினை கட்டி அணைத்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உன் கேமை விளையாடுங்க என்று கூறினார் லாஸ்லியாவின் தந்தை.
அதே போல லாஸ்லியாவிடமும் இனி நீ ஆரம்பத்தில் எப்படி இறுதியோ அப்படி இரு என்று லாஸ்லியாவிற்கு அறிவுரை அளித்துவிட்டு சென்றார் லாஸ்லியாவின் தந்தை. இந்த நிலையில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு சென்ற பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் தனியாக அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது பேசிய லாஸ்லியா, வெளியில் என்னை பத்தி நரையை face பண்ணி இருகாங்க. என்னை பற்றி யாரும் அவர்களிடம் நல்ல விதமாக பேசவில்லை. நான் செய்யும் இந்த விஷயம் அவர்களை பாதிக்கிறது என்றால் அது மிகவும் தவறான விஷயம். நான் செய்த தவறுக்கு நான் எதிர்கொண்டால் பரவாயில்லை. ஆனால், அவர்களுக்கு எதவும் ஆக கூடாது. இனியாவது நான் என்னுடைய கேமை ஆட வேண்டும். நாளையில் இருந்து நான் அவர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
அவர்களுக்கு நான் ஆரம்பத்தில் இருந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கவவாவது நான் என்னுடைய கேமை நான் விளையாட வேண்டும். அதே போல நீயும் இரு நீயும் உன்னுடைய கேமை விளையாடு என்று அட்வைஸ் செய்தார். எனவே, லாஸ்லியா தந்தை விட்ட டோஸில் லாஸ்லியா கொஞ்சம் மாறியுள்ளார் என்று நேற்று தெரிந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.